சென்னை வடக்கு, சென்னை தெற்கு, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், நீலகிரி (தனி), பொள்ளாச்சி, கோயம்புத்தூர், பெரம்பலூர் ஆகிய 7 தொகுதிகளில தி.மு.க, அ.தி.மு.க பா.ஜ.க ஆகிய பிரதான கட்சிகள் நேரிஅடியகா தமிழ்நாட்டில் பா.ஜ.க-வும் காங்கிரசும் 7 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.
தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்து இந்த மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில், தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி பிரதானக் கூட்டணிகளாக மோதுகின்றன. காங்கிரஸ் கட்சி மயிலாடுதுறை தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கவில்லை. மற்ற அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில், தி.மு.க-வின் உதயசூரியன் சின்னம் - அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னம், பா.ஜ.க-வின் தாமரை சின்னம் இடையே நேரடியாக 9 தொகுதிகளில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
அதே நேரத்தில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
தென் சென்னை தொகுதியில் தி.மு.க சிட்டிங் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன், பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதே போல, வட சென்னை தொகுதியில் சிட்டிங் எம்.பி கலாநிதி வீராசாமியை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் ராயபுரம் ஆர். மனோ மற்றும் பா.ஜ.க வேட்பாளர் ஆர்.சி. பால் கனகராஜ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
கோவையில் அ.தி.மு.க ஐடி பிரிவு தலைவர் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பா.ஜ.க மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை ஆகியோரை தி.மு.க.வின் கணபதி பி. ராஜ்குமார் எதிர்கொள்கிறார். முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க சிட்டிங் எம்.பி-யுமான நீலகிரி (தனி) தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. பா.ஜ.க சார்பில் மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகனை எதிர்த்து ஆ. ராசாவும், அ.தி.மு.க சார்பில் சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் ப. தனபாலின் மகனான டி.லோகேஷ் தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக தி.மு.க இந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வை எதிர்த்து 19 தொகுதிகளில் நேரடியாக போடியிடுகிறது. அதே போல, பா.ஜ.கவை எதிர்த்து 12 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது. அதே போல, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே 7 தொகுதிகளில் நேரடியான போட்டி ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் டி.அர்.பி. பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியிலும் பா.ஜ.க-வின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி வி.எஸ். மாதேஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.