திமுக அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கச் சென்னையில் திமுக சார்பில் இன்று கூடுகிறது அனைத்துக்கட்சி கூட்டம். காவிரி வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ‘காவிரி நீர்மேலாண்மை ஆணையம்’ உடனே அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பில்…

By: Updated: May 22, 2018, 05:22:05 PM

காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கச் சென்னையில் திமுக சார்பில் இன்று கூடுகிறது அனைத்துக்கட்சி கூட்டம்.

காவிரி வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ‘காவிரி நீர்மேலாண்மை ஆணையம்’ உடனே அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பில் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கும் அனைத்து முடிவுகளையும் ஆணையம் தான் எடுக்கும் என்ற உத்தரவையும் அளித்தது.

இந்நிலையில், ஆணையத்துக்கான அதிகாரங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக திமுக சார்பில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட திமுகவின் தோழமைகள் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காவிரி விவகாரத்தில் திமுக எடுக்க இருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது கூட்டத்தின் முடிவில் தெரிய வரும்.

இந்த அனைத்துக்கட்சி கூட்டம் குறித்த லைவ் விவரங்கள் :

காலை 10.30 : திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் வைகோ, முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன், திருமாவளவன், காதர் மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் மொத்தம் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

காவிரி பிரச்னைக்காக தன்னெழுச்சி போராட்டங்கள் நடத்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறுவை சாகுபடியை காப்பாற்ற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், சமஸ்கிருத மொழியை திணிக்கும் குருகுல கல்விக்கு எதிர்ப்பு என்பன 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல, ஐஏஎஸ், ஐபிஎஸ், தேர்வுகளில் செய்திருக்கும் மாற்றத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என ஐந்தாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dmk all party meeting today at anna arivalayam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X