DMK Protest: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காஞ்சிபுரத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
ஆளுயர மாலை; வாள்; பதாகை!- செயற்குழுவில் அதகளப்படுத்திய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் நேற்று ஒப்புதல் அளித்தார்.இதையடுத்து இந்த விபரம் மத்திய அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. மாநிலங்களவையில் இந்த வேளாண் மசதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதோடு குடியரசுத் தலைவரையும் சந்தித்து கடிதம் அளித்தனர்.
இதற்கிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகத்தில் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும், இன்று திமுக கூட்டணி கட்சிகள் இன்று வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். காஞ்சிபுரத்தில் wஅடந்த போராட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பிய அவர், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வேளாண் மசோதாக்கள் : வீடியோவில் இருப்பது வேறு; துணைத் தலைவர் கூறியது வேறு!
அதோடு வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டப்போராட்டம் நடத்தும் என்றும், கோரிக்கை நிறைவேறவில்லை எனில் நீதிமன்றம் செல்வோம் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தவிர, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கந்தன்சாவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.பி. வைகோ பங்கேற்றார். கோவில்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி, திருச்சியில் அன்பில் மகேஷ், கடலூரில் எம்.பி. திருமாவளவனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு சென்னை மேற்கில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், சென்னை வடக்கில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”