Advertisment

12 தொகுதியில் 3-வது இடம்; 7-ல் டெபாசிட் இழப்பு: அ.தி.மு.க-வின் தோல்வி பா.ஜ.க-வுக்கு லாபம் ஏன்?

அ.தி.மு.க. 3வது இடத்துக்குத் தள்ளப்பட்ட அந்த 12 தொகுதிகளில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) தி.மு.க-வுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

author-image
WebDesk
New Update
DMK alliance sweeps Tamil Nadu why AIADMKs loss is BJPs gain in tamil

2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு இந்தத் தேர்தல் ஒரு பாடம் என்று அ.தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அருண் ஜனார்த்தனன் - Arun Janardhanan 

Advertisment

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: As DMK alliance sweeps Tamil Nadu, why AIADMK’s loss is BJP’s gain

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைப்பெற்று, ஜூன் 4 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. 

ஆனால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி மோசமான தோல்வி பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, தொடர்ந்து இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், அ.தி.மு.க அதன் எதிர்காலம் குறித்த கேள்விகளில் சிக்கித் தவிக்கிறது. 

கடந்த முறை அ.தி.மு.க., ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற போது, அக்கட்சி 19.39 சதவீத வாக்குகளை பெற்றது. இம்முறை அக்கட்சியின்  வாக்கு 20.46 சதவீதமாக அதிகரித்த போதிலும், 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. ஒரு காலத்தில் வலிமைமிக்க சக்தியாக இருந்த திராவிடக் கட்சி, முக்கியமான 12 தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. 

மேலும், அ.தி.மு.க. 3வது இடத்துக்குத் தள்ளப்பட்ட அந்த 12 தொகுதிகளில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) தி.மு.க-வுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் ஒன்பது இடங்களில் பா.ஜ.க இரண்டாவது இடத்தைப் பிடித்தது. சென்னை சென்ட்ரல், சென்னை தெற்கு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், தருமபுரி, ராமநாதபுரம் மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் 2019 ஆம் ஆண்டு அ.தி.மு.க முன்னிலையில் இருந்த தொகுதிகள் ஆகும். 

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம், தமிழ்த் தேசியத் தலைவர் சீமானின் நாம் தமிழர் கட்சி (நா.த.க) அ.தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்தைப் பிடித்தது என்பதுதான் அ.தி.மு.க-வுக்கு மிகவும் கவலையளிக்கிறது. சென்னை தெற்கு, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் களமாடிய  வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு இந்தத் தேர்தல் ஒரு பாடம் என்று அ.தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ள நிலையில், அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஒருவர், எடப்பாடி பழனிசாமி அல்லது இ.பி.எஸ் எதிர்வரும் ஆபத்தின் அறிகுறிகளைப் படிக்க வேண்டும் என்றார். "தென் தமிழகத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சீமானின் நா.த.க-வும், பா.ஜ.க.வும் எங்கள் வாக்குகளை விழுங்கிவிட்டன. கட்சியை சீரமைப்பது இப்போது முக்கியமானது என்பதை முடிவுகள் காட்டுகின்றன." என்று அவர் கூறினார். 

மற்றொரு தலைவர் பேசுகையில், "இ.பி.எஸ் கட்சியின் எதிர்காலத்தை உறுதி செய்வதை விட கட்சியின் மீது தனது அதிகாரத்தை வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் மற்றும் வி.கே.சசிகலா போன்ற செல்வாக்கு மிக்க பிரமுகர்களின் வெளியேற்றம், குறிப்பாக தென் தமிழகத்தில், ஓ.பி.சி-தேவர் சமூகத்திலிருந்து வாக்காளர் தளத்தின் கணிசமான பகுதியை அந்நியப்படுத்தியது. தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு என்.டி.எ உடனான கூட்டணியை துண்டித்தது தாமதமான முடிவு. அது கட்சியை மேலும் பலவீனப்படுத்தியது.

பலம் வாய்ந்த தி.மு.க மற்றும் பா.ஜ.க-வின் தேசிய செல்வாக்கால் மறைக்கப்பட்ட அ.தி.மு.க-வை ஒரு போட்டியல்ல என்று வாக்காளர்கள் உணர்ந்தனர். டெல்லியிலும் தி.மு.க பலமாக இருப்பதையும், பா.ஜ.க வெற்றி பெறுவதையும் அவர்கள் அறிந்திருந்தனர். கட்சியின் சக்தி வாய்ந்த உள்ளூர் தலைவர்கள் செலவழித்த முயற்சிகள் மற்றும் வளங்கள் இருந்தபோதிலும், நாங்கள் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், கோயம்புத்தூர் பெரும் சங்கடமாக இருந்தது, ”என்று அந்தத் தலைவர் கூறினார்.

“பா.ஜ.க.வுக்கு ஆதரவாக, குறிப்பாக கோயம்புத்தூர் மற்றும் ராமநாதபுரம் போன்ற தொகுதிகளில் கட்சியில் இருந்து குறிப்பிடத்தக்க கடைசி நிமிட உள்ளடி வேலைகள் நடந்தன. தி.மு.க-வின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இ.பி.எஸ் கூட்டணியை உருவாக்குவதில் தோல்வியடைந்தார். இ.பி.எஸ்-ஸின் இயலாமைதான் பா.ம.க-வைத் தக்கவைக்கத் தவறியது என்று நான் கூறுவேன், இது எங்களின் வாக்குப் பங்கையும், தருமபுரி, வேலூர் போன்ற தொகுதிகளில் செயல்திறனையும் கூட உயர்த்தியிருக்கலாம்” என்கிறார் சேலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க மூத்த தலைவர். 

அண்ணாமலை ஏன் நம்பிக்கையுடன் இருக்கிறார்?

இதற்கிடையில், பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கோயம்புத்தூரில் இருந்து தோல்வியடைந்த மாநில பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலை தலைமையிலான தீவிர பிரச்சாரம், தேர்தல் வெற்றியாக மாறாதத் தவறிவிட்டது. பா.ஜ.க-வின் வாக்குகள் 11.24% இல் தேக்கமடைந்தன. இது அக்கட்சின் இலக்கான 25% ஐ விட மிகக் குறைவு. இருமுனைப் போட்டிகளின் பாரம்பரிய இயக்கவியலை சீர்குலைத்த அ.தி.மு.க-வின் பிரச்சனைகள் இந்தத் தேர்தலில் ஒரு கோட்டை உருவாக்குகின்றன. அண்ணாமலை அதை வெற்றி என்று முத்திரை குத்துகிறார்.

“சென்னை நகரத் தொகுதிகள், மதுரை உள்ளிட்ட பல தொகுதிகளில் அ.தி.மு.க-வை பா.ஜ.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளியுள்ளது. அதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றி. 2014-ல் 40% ஆக இருந்த அ.தி.மு.க வாக்கு சதவீதம் 2024-ல் 20% ஆகக் குறைந்துள்ளது என்றால் அதுதான் அவர்களின் பிரச்சனை. எங்களது வளர்ச்சி நமக்கு சாதகமாக உள்ளது. 2019ல் 33 சதவீதமாக இருந்த தி.மு.க-வின் வாக்கு சதவீதம் தற்போது 26.93 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தப் போக்குகள் 2026-ல் மாநிலத்தில் கூட்டணி ஆட்சிக்கு வழி வகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார் அண்ணாமலை.

ஆனால், கோவையில் உள்ள மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர், “அதிகபட்ச வளங்களையும் அதிகாரத்தையும் பயன்படுத்தினோம். இதைத் தாண்டிச் செல்வதற்கு உறுதியான உழைப்பு தேவை. இனிமேல் அவர் (அண்ணாமலை) உறுதியான அடித்தளத்தை அமைக்க வேண்டும். மதுரைக்கு எய்ம்ஸ் வருவதை உறுதிசெய்து, பேரிடர்களின் போது மாநிலத்திற்கு நிவாரணம் மறுக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உட்கட்சியில் இருக்கும் அதிருப்தி பா.ஜ.க-வின் பிரச்சாரத்தையும் சிதைத்தது. ஒன்று நாங்கள் எங்கள் அதிகபட்ச வளங்களையும் சக்தியையும் பயன்படுத்தினோம், அல்லது செந்தில் பாலாஜி போன்ற போட்டியாளர்களை நாங்கள் குறிவைத்தோம். இந்த கடுமையான தந்திரங்களுக்கு டெல்லி முழு ஆதரவை வழங்கியது. விஜயதரணியை காங்கிரசில் இருந்து கொண்டு வந்தது போன்ற முடிவுகளால் பா.ஜ.க-வின் இமேஜ் பாதிக்கப்பட்டது. மாநிலத்தில் மேலும் எந்த வளர்ச்சியும் இருந்தால், கட்சி பணியை அதிகரிக்க வேண்டும் மற்றும் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை சிந்திக்க வேண்டும்." என்று அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Edappadi K Palaniswami Tamilnadu Bjp Aiadmk Dmk Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment