காஞ்சிபுரம் மாவட்ட சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் சந்தித்துப் பேசி ஆறுதல் தெரிவித்தனர். மேலும் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், சாம்சங் தொழிலாளர்கள் அமைதியாக போராடிய நிலையில் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கை அரசு திரும்ப பெற வேண்டும்.
சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காதது அடக்குமுறை. சாம்சங் நிறுவனத்தை எதிர்க்கவில்லை. அதன் அடக்குமுறையையே எதிர்க்கிறோம் என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“