/tamil-ie/media/media_files/uploads/2018/01/mk-stalin-eps....jpg)
Vellore By Election, dmk kathir anand, A.C.Shanmugam, வேலூர் நாடாளுமன்றத் தொகுதி, வேலூர் லோக்சபா இடைத் தேர்தல்
திருவாரூர் இடைத்தேர்தல் 2019 : மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். ஜனவரி 28ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 31ம் தேதி நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். நேற்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் திருவாரூரில் அமலக்கு வந்தது.
மேலும் படிக்க : திருவாரூர் இடைத் தேர்தல் எப்போது..? தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்
நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் வரும் இடைத்தேர்தல் என்பதால், தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் ஆட்சி எது, கூட்டணியில் மாற்றம் உருவாக்க வேண்டுமா என்பதைப் போன்ற விசயங்களை அறிந்து கொள்ள முன்னோட்டமாக இந்த தேர்தல் அமையும் என்பது குறிப்பிடத்தக்கத்து.
திருவாரூர் இடைத்தேர்தல் 2019 : வேட்பாளர்கள் நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கும் திமுக
கலைஞரின் தொகுதியாகவே இருந்தாலும் கூட, வேட்பாளராக போட்டியிட அனைவருக்கும் வாய்ப்பளிக்கு வகையில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது திமுக.
"திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்"
கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் மற்றும் நேர்காணல் விவரம்:
கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் அறிவிப்பு! pic.twitter.com/0AMKLKKFF0
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) 31 December 2018
அக்கட்சி நேற்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் படி, போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 2ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் 3ம் தேதி (நாளை மறுநாள் - வியாழக்கிழமை) மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் ஒப்படிக்க வேண்டும்.
வேட்பாளர்கள் நேர்காணல் வெள்ளிக்கிழமை மாலை (4ம் தேதி) 5 மணிக்கு நடைபெறும். இன்று காலை 10 முதல் வேட்பாளராக விரும்புவோர்கள் ரூபாய் 1000-த்தை கட்டி விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.
திருவாரூர் இடைத்தேர்தல் 2019 : வேட்பாளர்கள் பரிசீலனை 4ம் தேதி தான் - அதிமுகவின் அறிவிப்பு
அதிமுகவும் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கக் கூறி கேட்டுக் கொண்டுள்ளது. நாளை காலை 9.30 மணியில் இருந்து, வியாழக்கிழமை மாலை வரை விண்ணப்ப கட்டணங்கள் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணத் தொகை ரூ. 25,000. இப்பணத்தை செலுத்தி தலைமைக் கழகத்தில் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.
வேட்பாளராக விரும்புவோர்களின் விண்ணப்பங்களை அதிமுக 4ம் தேதி மாலை பரிசீலனை செய்யும் என்று தங்களின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் அதிமுகவினர்.
தலைமைக் கழக அறிவிப்பு pic.twitter.com/G7r12GBEP3
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) 31 December 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.