Dmk | Tamil Nadu Congress | Lok Sabha Election: தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதனையொட்டி தேசிய - மாநில அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 40 தொகுதியிலும் போட்டியிடும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகள், ம.தி.மு.க. 1 தொகுதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதி, கொங்கு மக்கள் தேசிய கட்சி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு கூட்டணி கட்சிகளுக்கு 20 இடங்களை ஒதுக்கிய நிலையில் இந்த முறை ஒரு இடம் குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளது.
தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்:-
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - ராமநாதபுரம்- நவாஸ் கனி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - நாமக்கல் - மாதேஸ்வரன்
கம்யூனிஸ்ட் கட்சி - நாகை- வை.செல்வராஜ்
திருப்பூர்- சுப்பராயன்
மார்க்சிஸ்ட் கட்சி - மதுரை- வெங்கடேசன்
திண்டுக்கல் - சச்சிதானந்தம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி - சிதம்பரம்- தொல் திருமாவளவன்
விழுப்புரம்- ரவிக்குமார்
ம.தி.மு.க - திருச்சி- துரை. வைகோ
காங்கிரஸ்
திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில்
கிருஷ்ணகிரி- கே.கோபிநாத்
சிவகங்கை- கார்த்தி சிதம்பரம்
விருதுநகர்- மாணிக்கம் தாகூர்
கரூர்- ஜோதிமணி
கடலூர்- டாக்டர் விஷ்ணு பிரசாத்
நெல்லை- ராபர்ட் புரூஸ்
மயிலாடுதுறை- ஆர்.சுதா
கன்னியாகுமரி- விஜய் வசந்த்
புதுவை- வைத்திலிங்கம்
தி.மு.க
சேலம்- டி.எம்.செல்வகணபதி
தருமபுரி- வழக்கறிஞர் அ. மணி
கோவை- கணபதி பி.ராஜ்குமார்
பொள்ளாச்சி- ஈஸ்வரசாமி
நீலகிரி- ஆ.ராசா
ஈரோடு - கே.இ.பிரகாஷ்
பெரம்பலூர்- அருண் நேரு
தஞ்சை - முரசொலி
தென்காசி- ராணி
தூத்துக்குடி - கனிமொழி
வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி
மத்திய சென்னை- தயாநிதி மாறன்
தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்
ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம்- க.செல்வம்
வேலூர் - கதிர் ஆனந்த்
அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்
திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை
கள்ளக்குறிச்சி- மலையரசன்
தேனி- தங்கத் தமிழ் செல்வன்
ஆரணி- தரணி வேந்தன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“