ஒரே மேடையில் பங்கேற்கும் ஸ்டாலின் – மோடி; பாஜக – திமுக கூட்டணி சேருமா?

திமுக – பாஜக கொடி ஒன்றாக பறப்பதை வைத்தும், முதல்வர் மு.க. ஸ்டாலின் – பிரதமர் மோடி ஒரே மேடையில் பங்கேற்க உள்ளார்கள் என்பதை வைத்து் திமுக – பாஜக கூட்டணி இணைய உள்ளதாக சமூக ஊடகங்களில் உலவும் ஊகங்கள் எழுந்துள்ளன.

DMK and BJP alliance not possible, DMK BJP farm alliace social media rumor, what answer DMK BJP party members, ஒரே மேடையில் பங்கேற்கும் ஸ்டாலின் - மோடி, பாஜக - திமுக கூட்டணி சேருமா , Tamilnadu politics, DMK, BJP, IETamil

பிரதமர் மோடி தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைக்க ஜனவரி 12ம் தேதி மதுரை வருகிறார். பிரதமரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருதால், சிவகங்கையில் சாலைகளில் திமுக – பாஜக கொடிகள் அருகருகே ஒன்றாக பறந்துகொண்டிருக்கும் புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, திமுக – பாஜக கூட்டணி சேர உள்ளதாக சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12ம் தேதி தமிழகம் வரவுள்ள நிலையில், திமுகவும் பாஜகவும் ஒன்றுக்கொன்று நெருக்கம் காட்டுவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் எழுந்துள்ளன. ஆனால், இது வெறும் அரசு நிகழ்ச்சி என்று திமுக – பாஜக கட்சித் தலைவர்களும் மறுத்துள்ளனர். பாஜக – திமுக கூட்டணிக்கு சாத்தியமே இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் மு.க. ஸ்டாலினும் மேடையை பகிர்ந்து கொள்வார்கள் என்ற செய்தி வெளியானவுடன், நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள், திமுக விமர்சகர்கள், திமுகவும் பாஜகவும் ரகசியக் கூட்டணி அமைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் திமுகவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

அண்மையில், சிவகங்கையில் திமுக – பாஜக கொடிகள் ஒன்றாக பறக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி திமுக – பாஜக கூட்டணி சேர உள்ளதாக எழுந்த ஊகங்களை திமுக மற்றும் பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களில் இந்த ஊகங்களை மறுத்துள்ளனர்.

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பல்வேறு முக்கியமான திட்டங்களைச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இதை வைத்துத்தான் பார்க்க வேண்டும். அதிமுக அரசும் அதையே செய்தது. ஆனால், திமுக அப்போது அதிமுகவை மத்திய அரசின் அடிமை என்று கிண்டல் செய்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக செயல்படுவதாகவும், திமுகவும் பாஜகவும் ஒன்று சேரும் என்ற ஊகங்கள் அடிப்படையற்றவை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஜனவரி 3ம் தேதி சிவகங்கையில் வேலு நாச்சியாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பாஜக மகளிர் அணியினர் அங்கு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். எனவே, அவரது நினைவிடத்திற்கு செல்லும் வழியில் பாஜக கட்சி கொடி கம்பங்களை அமைத்துள்ளோம். இதேபோல், அவரது பிறந்தநாளை கொண்டாடும் அரசு விழாவில் பங்கேற்க திமுகவினரும் அங்கு வந்தனர். எனவே, அவர்களின் கொடிகளும் அங்கே இருந்தன. அது கூட்டணிக்கானது இல்லை” என்று வானதி சீனிவாசன் கூறினார்.

திமுக எதிர்க் கட்சியாக இருந்தபோது, பிரதமர் மோடி, தமிழகம் வருகை தந்தபோது, திமுகவின கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். மேலும், கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமர் மோடி, தமிழகம் வரும்போது திமுக ஆதரவாளர்கள் இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கு திமுக தரப்பில், “மத்திய அரசு அப்போது தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. அதனால், ‘கோ பேக் மோடி’ என்று சொன்னோம். இப்போது மருத்துவக் கல்லூரிகளை திறக்க மட்டுமே வருகிறார். திமுகவை பாஜகவுடன் இணைத்து சமூக வலைதளங்களில் உலவும் வதந்திகள், திமுகவை வீழ்த்தி, கெட்ட பெயரைக் கொண்டுவரும் நோக்கத்தில் சிலர் பேசி வருகிறார்கள். தமிழக மக்கள் பாஜகவை எதிர்க்கிறார்கள் என்று திமுக பாஜகவுடன் கூட்டணி சேர உள்ளதாகவும் மக்களை நம்ப வைத்து ஆளும் கட்சியின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கம் கொண்டது. இந்த உத்தியை தேர்தலுக்கு முன்பே நாம் தமிழர் கட்சியினர் பயன்படுத்தினார்கள் என்பதை திமுக ஆதரவாளர்கள் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

திமுக – பாஜக கொடி ஒன்றாக பறப்பதை வைத்தும், முதல்வர் மு.க. ஸ்டாலின் – பிரதமர் மோடி ஒரே மேடையில் பங்கேற்க உள்ளார்கள் என்பதை வைத்தும் திமுக – பாஜக கூட்டணி இணைய உள்ளதாக சமூக ஊடகங்களில் உலவும் ஊகங்களுக்கு வாய்ப்பு இல்லை என்றே இரண்டு கட்சியினரும் தெரிவிக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk and bjp alliance as possible social media rumor what answer both party members

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com