scorecardresearch

மோடி- மு.க. ஸ்டாலின் பட விவகாரம்; தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் மோதல்

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய குழு உறுப்பினர்களின் கூட்டத்தில், தி.மு.க., பா.ஜ.க கவுன்சிலர்கள் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.

DMK and BJP councilors got into an argument in Tiruvallur
திமுக பெண் ஒன்றிய குழு உறுப்பினர்களின் கணவர்களுக்கு மேடை அமைத்து விஐபி இருக்கை வழங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, பூண்டி ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணா தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் முன்னிலை வகித்தார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்க அனுமதிக்க வேண்டும் என பாஜக கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் திமுக, பாஜக கவுன்சிலர்கள் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பிரதமர் நரேந்திர மோடி படத்தை வைக்காவிட்டால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்தையும் எடுங்கள் என பாஜகவினர் கூறினார்.

இதனால் கூட்டத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், திமுக பெண் கவுன்சிலர்களின் கணவர்மார்களுக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திமுக பெண் ஒன்றிய குழு உறுப்பினர்களின் கணவர்களுக்கு மேடை அமைத்து விஐபி இருக்கை வழங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய குழு உறுப்பினர்களின் கூட்டத்தில், தி.மு.க., பா.ஜ.க கவுன்சிலர்கள் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dmk and bjp councilors got into an argument in tiruvallur

Best of Express