மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல்15-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – திமுக அறிவிப்பு

கொரோனா நோய்த் தொற்றில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 15-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

dmk announced All party meeting on April 15, alla party meeting headed by DMK Stalin, ஸ்டாலின் தலைமயில் அனைத்துக் கட்சி கூட்டம், ஏப்ரல் 15ம் தேதி அனைத்து கட்சி கூட்டம், திமுக அறிவிப்பு, கொரோனா வைரஸ், govt approach on corona mission, dmk, anna arivalayam, latest tamil nadu news, latest dmk news, covid-19, coronavirus lock down

கொரோனா நோய்த் தொற்றில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 15-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று விவகாரத்தில், மத்திய மாநில அரசுகளின் புள்ளிவிவரங்களில் முரண் உள்ளதாகக் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிகளை அரசு மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்று கூறினார். மேலும், மத்திய அரசுக்காக காத்திருக்காமல் தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று விமர்சித்து இருந்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிகைகள் தொடர்பாக, மாநில அரசு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தின.

மு.க.ஸ்டாலின் விமர்சனத்துக்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலின் விமர்சனத்துக்கு பதிலளித்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்றில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 15-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக இன்று அறிவித்துள்ளது.

இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா நோய்த்தொற்றில் மத்திய மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 15-ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்” என்று அறிவித்துள்ளது.

திமுகவின் கூட்டணி கட்சி தலைவர் திருமாவளவன் பாண்டிச்சேரியில் உள்ளார். ஊரடங்கு அமலில் உள்ளதால் அவர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் சமூக விலகலை கடைபிடித்து வருகிறார். அதே போல, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். இதனால், திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் நேரடியாக கலந்துகொள்வார்களா அல்லது வீடியோ கன்ஃபரன்ஸ் மூலம் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk announced all party meeting on april 15 headed by mk stalin about govt corona mission approach in chennai

Next Story
திருச்சியில் கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்கு: டாக்டர்கள் மீது எச்சில் துப்பியதாக புகார்attempt to murder case filed against covid-19 positive patients, கொரோனா நோயாளிகள் மீது கொலை முயற்சி வழக்கு, திருச்சி, fir filed againts covid-19 postive patients, covid-19 positive patients spit on doctor in Tiruchi, doctor complaint against covid-19 postive patients, latest corona news, latest coronavirus news, lates tamil nadu coronavirus news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com