டாக்டர் கனிமொழி, ராஜேஷ்குமார்: திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 ராஜ்ய சபா எம்.பி இடங்களுக்கு திமுக வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 ராஜ்ய சபா எம்.பி இடங்களுக்கு திமுக வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 இடங்களுக்கான ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திமுக வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Advertisment
அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜான் மார்ச் 23, 2021ல் காலமானார். அதனால், அதிமுக சார்பில் ஒரு ராஜ்ய சபா எம்.பி பதவி காலியானது. அதிமுகவில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.க்களாக பதவி வகித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றதையடுத்து, இருவரும் தங்கள் ராஜ்ய சபா எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், தமிழ்நாட்டில் இருந்து 3 ராஜ்ய சபா எம்.பி இடங்கள் காலியானது. இந்த 3 இடங்களும் அதிமுகவில் இருந்து காலியானவை.
திமுக முதலில் காலியான முகமது ஜான் இடத்திற்கு தனியாகவும் மற்ற 2 இடத்துக்கு தனியாகவும் ராஜ்ய சபா எம்.பி தேர்தல் அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, முதலில் ஜான் முகமதுவின் இடத்துக்கு முதலில் ராஜ்ய சபா எம்.பி தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிகபட்சமாக 159 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்றுள்ள திமுகவுக்கே இந்த இடங்கள் கிடைக்கும் என்பதால் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
அதனால், முகமது ஜான் இடத்திற்கு நடத்தப்பட்ட ராஜ்ய சபா எம்.பி தேர்தலில் திமுகவைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
Advertisment
Advertisements
அதே போல, தமிழ்நாட்டில் இருந்து காலியாக உள்ள 2 ராஜ்ய சபா எம்.பி இடங்களுக்கு (வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி வகித்த ராஜ்ய சபா எம்.பி பதவிக்கான இடங்கள்) இந்திய தேர்தல் ஆணையம் அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 ராஜ்ய சபா எம்.பி இடங்களுக்கு திமுக வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜ்ய சபா எம்.பி வேட்பாளர்களை அறிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2021 அக்டோபர் 4-அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை 2 உறுப்பினர்கள் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக 1. டாக்டர். கனிமொழி என்.வி.என்.சோமு,. எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., 2. கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், எம்.காம்., டி.சி.எம். ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"