திமுக சார்பில் ஐ.டி துறை ஆணையருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

திமுக சார்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன், மற்றும் திமுக அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தின் வேலூர் தொகுதியில் திமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் திமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால் தேர்தல் நெருங்கிய சமயத்தில் அவர் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களில், வருமாவரி சோதனை நடத்தப்பட்டது.

இதனால் அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு மற்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணையில், வருனவரித்துறை ஆணையர் இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் மதிப்பீட்டு அதிகாரியிடம் இருந்து வழக்கு தொடர்பாக ஆவணங்களை மற்றொரு அதிகாரியிடம் மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இந்த உத்தரவை எதிர்த்து திமுக சார்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன், மற்றும் திமுக அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் மூத்த நிலை ஆலோசகர் ஹேமா முரளிகிருஷ்ணன், ஏ.பி.சீனிவாஸ் மற்றும் ஏ.என்.ஆர். ஜெயப்பிரதப் ஆகியோர், அடங்கிய நீதிபதி குழு, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், ஆணையாளரின் உத்தரவின் செயல்பாட்டை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதன் பேரில், இது தொடர்பான பிப்ரவரி 18 க்குள் தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று, ஐ-டி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 1-ந் தேதி, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் மற்றும் அவரது தந்தையும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன், ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில், வருமானவரித்துறை சார்பில், சோதனையிடப்பட்டது. இந்த வழக்கை சென்னை மத்திய வட்டத்தில் உதவி ஆணையர் ஒருவர் விசாரித்து வருவதாக கூறப்பட்டது.

ஆனால், சென்னை வருமான வரி இயக்குநர் ஜெனரல், திமுக மற்றும் அதன் அறக்கட்டளையின் ஆதாரங்களை, அந்த உதவி ஆணையரின் விசாரணைக்கு வசதியாக” மாற்றுமாறு கூறியது, 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 127-ன் கீழ் தனது அதிகாரங்களைப் தவறாக பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த இடமாற்ற உத்தரவுகள் குறித்து வாதாடிய வழக்கறிஞர் வில்சன், வருமானவரி சட்டத்தின் 127 பிரிவின் கீழ், இந்த இடமாற்றம் செய்ய ஆணையிடுவதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார். ஆனால் இந்த மாற்றத்திற்கான காரணம் அந்த உத்தரவுகளில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆலோசகர் வழக்கு தொடர்பான விருப்பப்படி மாற்ற முடியாது என்றும், ஒவ்வொரு அலுவலக பொறுப்பாளருக்கும் எதிராக நிலுவையில் வழக்குகள் இதில் இணைக்கப்படுவதாக கூறிய அவர், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் காரணமாக நாங்கள் அமைதியாக இருப்போம் என்று நினைக்கிறர்கள் என்று கூறிய வில்சன் கமிஷனரின் உத்தரவுகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk approaches high court aganist it department

Next Story
தமிழக அரசியல் பரபரப்பு : சசிகலா மீது அதிமுக அமைச்சர்கள் புகார்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com