கோடி கோடியாக இலங்கையில் முதலீடு செய்தாரா அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர்?

சீனாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள ஹம்பந்தோட்டா துறை முகத்தில் அமைய இருந்தது அந்த எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

DMK Arakonam candidate Jagathrakshakan family : இலங்கையில் கச்சா எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ஓமன் அரசு முதலீடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஓமனின் கச்சா எண்ணெய் அமைச்சகம்,  சிங்கப்பூர் நிறுவனமான சில்வர் பார்க் இண்டெர்நேஷனல் பிரைவேட் லிமிட்டடுடன் இணைந்து இந்த ப்ரோஜெக்ட்டை செய்வதாக அறிவித்தது.

3.85 பில்லியன் அமெரிக்க டாலர்களில் அமைய இருக்கும் அந்த சுத்தகரிப்பு நிலையத்தின் 1887 மில்லியன் டாலர்கள் நேரடி முதலீட்டில், 70% முதலீட்டினை சிங்கப்பூர் நிறுவனமான சில்வர் பார்க் இண்டர்நேசனல் தர இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. மீதம் இருக்கும் 2000 மில்லியன் டாலர்கள் கடனாக பெறப்படும் என்று கூறப்பட்டது.

DMK Arakonam candidate Jagathrakshakan family

இந்நிலையில் ஓமன் அரசு இந்த திட்டத்தில் நாங்கள் இல்லை என்பதை வெளிப்படையாக செவ்வாய்க் கிழமை அறிவித்தது. மேலும் எங்களுக்கும் சில்வர் பார்க் இண்டெர்நேசனல் நிறுவனத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. இது தொடர்பாக ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடவில்லை என்பதையும் திட்டவட்டமாக அறிவித்தாக இலங்கை முதலீட்டுக் குழு கூறியுள்ளது.

அக்குழுவின் அறிவிப்பின் படி சிங்கப்பூரில் இயங்கி வரும் சில்வர் பார்க் இண்டர்நேசனல் நிறுவனம் சிங்கப்பூரின் கணக்கியல் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்திடம் (Accounting and Corporate Regulatory Authority) முறையாக பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இதன் நான்கு இயக்குநர்களில் மூவர் பெயர்கள் சுந்தீப் ஆனந்த ஜெகத்ரட்சகன், ஸ்ரீநிஷா ஜெகத்ரட்சகன் மற்றும் அனுசியா ஜெகத்ரட்சகன் என்று குறிப்பிட்டு சென்னை முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இம்மூவரும் அரக்கோணம் தொகுதியின் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனின் மகன், மகள், மற்றும் மனைவி ஆவார்கள்.

இலங்கை வரலாற்றில் இவ்வளவு பெரிய நேரடி முதலீட்டினை இன்று தான் காண்கின்றோம் என்று இலங்கையின் அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.

சீனாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள ஹம்பந்தோட்டா துறை முகத்தில் அமைய இருந்தது அந்த எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓமன் மற்றும் சிங்கப்பூரின் நேரடி முதலீட்டில் சுத்தகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் நிலையில், ஓமன் அரசிற்கும் இந்த ப்ரோஜக்ட்டிற்கும் சம்பந்தமில்லை என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் ஓமன் அரசிற்கும் சில்வர் பார்க் நிறுவனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசு நேரடியாக, சிங்கப்பூர் நிறுவனத்துடன் இந்தியர்களின் தொடர்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஜெகத்ரட்சகன் மத்திய இணை அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : திருமாளவன் கோட்டையா சிதம்பரம் ? என்ன சொல்கிறது கள நிலவரம்

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close