scorecardresearch

கள்ளப்பணத்தை வெள்ளை பணமாக மாற்ற தடுமாறும் தி.மு.க., அரசு: முனுசாமி குற்றசாட்டு

“அவற்றில் பல்வேறு திட்டங்களை தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இவர்கள் புதியதாக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை” – கே.பி.முனுசாமி

kp munusamy

வருகின்ற அதிமுக மனதிற்கு இடம் தேர்வு செய்யக்கூடிய வகையில், மதுரை மாவட்டத்தின் நிர்வாகிகளுடன் இடம் தேர்வு செய்ய முனுசாமி சென்றிருக்கிறார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரண்டாண்டு கால ஆட்சி, இதுவரையில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கிவந்த திட்டங்களை நிறுத்திய சாதனையை தான் திமுக தற்போது அவர்களது மாநாட்டில் தெரிவித்து வருகிறார்கள்.

அதிமுகவின் ஆட்சி காலத்தில், கருவில் உள்ள குழந்தை முதல் கல்லறைக்கு செல்லும் முதியவர் வரை அனைவருக்கும் ஏற்றவாறு பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா வழங்கி வந்தார்.

அவற்றில் பல்வேறு திட்டங்களை தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இவர்கள் புதியதாக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை.

மேலும், இந்த ஆட்சி காலத்தில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து, தங்களது 30,000 கோடி ரூபாய் கருப்பு பணத்தை எப்படி வெள்ளை பணமாக மாற்றுவது என்பதை யோசித்து வருகின்றனர். இந்த இரண்டு ஆண்டுகளில் இவர்களுடைய ஊழல் ஆட்சி தான் மேலோங்கி இருக்கிறது, மக்களுக்கு எந்த பணியும் செய்யவில்லை”, என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dmk black money allegations kp munusamy

Best of Express