New Update
00:00
/ 00:00
பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி அளித்து தமிழ்நாட்டிற்கு நிதி அளிக்காமல் கை விரிக்கும் பா.ஜ.க-வுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வெற்றி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அதன் ஒரு பகுதியாக, கள்ளிமடை பகுதியில் பிரச்சாரத்தை துவக்கிய அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து உப்பிலிபாளையம் பகுதியில் வாலிபால் விளையாடி இளைஞர்களை கவர்ந்த வேட்பாளர், வாக்குசேகரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திராவிட மாடல் அரசு மக்களுக்கு செய்த திட்டங்களான மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், மற்றும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று வாக்குசேகரித்து வருவதாகவும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் எதாவது ஒன்று என்றால் உடனடியாக சென்று அங்கு நிதி வழங்கப்படுகின்றது. தமிழகத்திற்கு மட்டும் எவ்வித நிதியும் பா.ஜ.க அரசு தர மறுக்கின்றது. இவர்களுக்கு இந்த்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். அதிமுக பாஜகவின் பி டீமாக செயல்படுகின்றது என்று குற்றம்சாட்டினார்.
இந்த பிரச்சாரத்தின்போது, மாநகர் மாவட்ட தி.மு.க செயலாளர் நா.கார்த்திக், பகுதிக் கழக செயலாளர் சிங்கை சிவா, மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி கார்த்திக், வட்டக்கழக செயலாளர் அன்பு, ஆனந்தன், செம்மொழி முருகானந்தம், இளைஞரணி அமைப்பாளர் தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.