/tamil-ie/media/media_files/uploads/2022/09/stalin-dmk.jpg)
மு.க. ஸ்டாலின்
திமுகவில் உட்கட்சி தேர்தல் நடந்தது வருகிறது. அதன்படி மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் 7 மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களை மாற்றி கட்சி தலைமை அதிரடி காட்டியுள்ளது. ரஜினி மக்கள் மன்றம், அ.ம.மு.க-வில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக பெ. மதியழகன் எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி கடந்த தேர்தலின்போது திமுகவில் இணைந்தவர். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஏனாதி பாலசுப்ரமணியன் மாற்றப்பட்டு பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக எஸ். சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்பு இங்கு பூபதி மாவட்ட செயலாளராக இருந்தார்.
தருமபுரி மேற்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் தேர்வாகியுள்ளார். இன்பசேகரனுக்கு மாற்றாக இவர் தேர்வாகியுள்ளார். இவர் அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்தவர். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக மூர்த்திக்கு பதிலாக மதுரா செந்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை தெற்கு மாவட்ட செயலாளராக தளபதி முருகேசன் , கோவை வடக்கு செயலாளராக தொண்டாமுத்தூர் ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவையில் மருதமலை சேனாதிபதி, ராமச்சந்திரன், கிருஷ்ணன், டாக்டர் வரதராஜன் ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.