கலைஞர் 95: தொண்டர்களை நோக்கி கையசைத்த கருணாநிதி, கோபாலபுரத்தில் உற்சாகம்

கலைஞர் 95 LIVE UPDATES: திமுக தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கோபாலபுரத்தில் கருணாநிதி இல்லத்தில் திமுக.வினர் குவிந்தனர்.

கலைஞர் 95 LIVE UPDATES: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக.வினர் கொண்டாடி வருகிறார்கள். சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதி இல்லத்தில் திமுக.வினர் குவிந்தனர்.

கலைஞர் 95 LIVE UPDATES: திமுக தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு கோபாலப்புரத்தில் கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் நலஉதவிகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். மருத்துவ முகாம், ரத்ததான முகாம் மற்றும் கவியரங்கம், வாழ்த்தரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Karunanidhi Birthday

கலைஞர் என்று தமிழக மக்களால் அழைக்கப்படும் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் விழாக்கோலம் கொண்டுள்ளது. கோபாப்புரத்தில் திமுக கொடிகள், தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவரின் பிறந்தநாளில், அவரது மகன் மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துக் கூறி ஆசிர் பெறுகிறார். இவரைத் தொடர்ந்து, மகள் கனிமொழியும் வாழ்த்துக் கூறி ஆசிர் பெறுகிறார்.

சென்னை கோபாலப்புரத்தில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர் சந்திக்க உள்ளனர்.

கலைஞர் 95 LIVE UPDATES: திமுக தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதன் லைவ் காட்சிகள்:

4:00 PM : டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், ‘கருணாநிதி முதுபெரும் அரசியல் தலைவர். எங்களுக்கு எதிர்க்கட்சி என்றாலும், அரசியல் நாகரீக அடிப்படையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்’ என்றார். அமைச்சர் ஜெயகுமாரும் தனிப்பட்ட முறையில் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

3:00 PM : காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பூ வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ‘வாழ்த்துவதற்கு வயது இல்லையே அய்யா. வணங்குகிறேன். நாடு கண்ட மிகச் சிறந்த மதிப்புக்குரிய தலைவர்களில் ஒருவரான கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டார்.

1:45 PM: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாழ்த்துச் செய்தியில், ‘இன்று முதுபெரும் தலைவர் திரு கலைஞர் அவர்களின் பிறந்த நாள். அவருக்கு என்னுடைய இனிய நல்வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டார்.

1:30 PM : தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்த வாழ்த்துச் செய்தியில், ‘இன்று 95 வது பிறந்தநாள் காணும் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் திமுக தலைவர் கலைஞர் அவர்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். 95 வயதிலும் அரசியல் பணியை அவர் சீரும் சிறப்புற செய்யவேண்டும், மேலும் கலைஞர் அவர்கள் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.’ என கூறியிருக்கிறார்.

1:00 PM : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘திரு கருணாநிதிஜிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் அவரது நல்ல உடல் நலத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பிரார்த்திக்கிறேன்’ என கூறியிருக்கிறார்.

11:55 AM : காலை முதல் கருணாநிதியின் தரிசனத்திற்காக காத்துக் கிடந்த தொண்டர்கள் கருணாநிதியின் கை அசைப்பால் உற்சாகம் அடைந்தனர்.

11:50 AM: கோபாலபுரம் இல்லம் முன்பு குவிந்திருந்த தொண்டர்களை சந்திக்கும் விதமாக கருணாநிதியை அவரது வீல்சேரில் அழைத்து வந்தனர். தொண்டர்களைப் பார்த்து கருணாநிதி கை அசைத்தார். சிரிக்கவும் செய்தார். பின்னர் தனது வாய்ப் பகுதியை தனது கையால் மசாஜ் செய்வது போல அழுத்தினார். அவரது உற்சாகம், சிரிப்புக்கு மத்தியில் கோஷமிட்டு வாழ்த்திய உடன்பிறப்புகள் மத்தியில் பேச முடியவில்லையே என்கிற சிறு வருத்தமும் அவரது முகத்தில் படர்ந்ததை புரிய முடிந்தது.

11.30 AM : பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘கருணாநிதிஜியின் பிறந்த நாளில், எனது அன்பான வாழ்த்துகள். கருணாநிதிஜி இந்தியாவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவர். சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர், பேச்சாளர். நீண்ட, நலமான வாழ்வுக்கு அவருக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும்’ என மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கருணாநிதியை சந்தித்து தான் நலம் விசாரித்த புகைப்படத்தையும் வாழ்த்துச் செய்தியுடன் பகிர்ந்திருக்கிறார் மோடி.

10:30 AM: கருணாநிதிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது ட்விட்டர் செய்தியில், ‘கருணாநிதிஜிக்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் நலத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்’ என கூறியிருக்கிறார்.

9:55 AM  : விழுப்புரம் மாவட்டத்தில் திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கருணாநிதி பிறந்தநாளை கொண்டாடினர்.

9.:30 AM : சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு தொண்டர்கள் வருகை. கருணாநிதியின் பிறந்தநாளில் அவரை சந்திக்க திமுக தொண்டர்கள் ஏராளமானோர் குவிய தொடங்கியுள்ளனர்.

9:00 AM : பாஜக சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருணாநிதியின் பிறந்தநாளுக்கு, தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

8:30 AM : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கலைஞர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

8:00 AM : திமுக தலைவர் கருணாநிதி, மகள் மற்றும் எம்.பி கனிமொழி, தனது வாழ்த்தை தந்தைக்குத் தெரிவித்தார்.

மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் பழ.கருப்பையா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உட்பட பலர் கலந்துகொண்டு கருணாநிதியை வாழ்த்திப் பேசுகின்றனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close