கருணாநிதி உடல்நிலை பின்னடைவு, 24 மணி நேரம் கெடு: காவேரி மருத்துவமனை அறிக்கை

Karunanidhi Medical Report: கருணாநிதியின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தை எட்டியிருப்பதையே மருத்துவமனை அறிக்கை கூறியிருப்பதாக கருதப்படுகிறது.

DMK Chief M Karunanidhi Medical Report: கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவை சந்தித்திருப்பதை அதிகாரபூர்வமாக காவேரி மருத்துவமனை அறிவித்தது. 24 மணி நேரம் கெடுவையும் விதித்திருக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதி, ஜூலை 28-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்ற இறக்கத்துடன் நகர்ந்த அவரது உடல்நிலை நேற்று(ஆகஸ்ட் 5) மீண்டும் மோசமானது.

Karunanidhi Medical Report, Kauvery Hospital, Karunanidhi News, Karunanidhi Latest News, Karunanidhi Death, Karunanidhi Death Rumors

Karunanidhi Medical Report: கருணாநிதி மருத்துவ அறிக்கை

கருணாநிதியின் கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. கருணாநிதியின் மொத்த குடும்பத்தினரும் இன்று காவேரி மருத்துவமனையில் முகாமிட்டனர். இன்று கருணாநிதியை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு சென்ற காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவை சந்தித்திருப்பதை உறுதி செய்தார்.

Karunanidhi Medical Report: கருணாநிதி மருத்துவ அறிக்கை

இந்தச் சூழலில் இரவு 7 மணியளவில் காவேரி மருத்துவமனை கருணாநிதியின் மருத்துவ அறிக்கையை வெளியிட்டது. அதில், ‘திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் மருத்துவ நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அவரது வயது மூப்பு பிரச்னைகள் காரணமாக, அவரது முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலான பணியாக தொடர்கிறது.

தொடர்ச்சியான கண்காணிப்பிலும், முறையான மருத்துவ உதவி மூலமாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொறுத்தே முன்னேற்றத்தை முடிவு செய்ய முடியும்’ என கூறப்பட்டிருக்கிறது.

Karunanidhi Health News Today, DMK Chief M Karunanidhi Health, கருணாநிதி உடல்நிலை LIVE UPDATES

கருணாநிதியின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தை எட்டியிருப்பதையே மருத்துவமனை அறிக்கை வேறு விதமான வார்த்தைகளில் கூறியிருப்பதாக கருதப்படுகிறது. இதனால் திமுக.வினரும், உலகம் முழுவதும் உள்ள கருணாநிதி அபிமானிகளும் சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close