/tamil-ie/media/media_files/uploads/2018/07/dmk-chief-m-karunanidhi-anna-university.jpg)
DMK Chief M Karunanidhi Health Updates: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையை காரணமாக வைத்து அண்ணா பல்கலைகழக கல்லூரிகளுக்கு விடுமுறை என்று வதந்தி பரவியது. சமூக வலைத்தளத்தில் பரவிய செய்தி பொய் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது அண்ணா பல்கலைகழகம்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 27ம் தேதி இரவு அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
Karunanidhi Health News Today: To Read, Click Here
இந்நிலையில், நேற்று அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவர் உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரவியது. மேலும் இதனால் அண்ணா பல்கலைகழக கல்லூரி மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக தகவல் ஒன்று வேகமாக பரவியது.
சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த செய்தி உண்மையில்லை என்றும் வெறும் வதந்தி தான் என்று அண்ணா பல்கலைகழகம் விளக்கம் அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.