திமுக தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் அனுமதி

DMK chief M Karunanidhi admitted to Chennai hospital: திமுக தலைவர் கருணாநிதி, மருத்துவ பரிசோதனைக்காக இன்று மருத்துவமனையில் அனுமதி.

By: July 18, 2018, 11:56:24 AM

திமுக தலைவர் கருணாநிதி, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக இன்று காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் என தகவல்.

திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வின் காரணமாக தற்போது சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு பெற்று வருகிறார். அவருக்கு நீர்ச்சத்து, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால், அதற்குரிய சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே கடந்த 2016ம் ஆண்டு மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, காவேரி மருத்துவமனையில், செயற்கை சுவாச குழாய் (டிரக்கியாஸ்டமி) பொருத்தப்பட்டது. அவருக்கு உதவியாக பணிவிடையாளர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு நான்காவது முறையாக டிரக்கியாஸ்டமி கருவி மாற்றிிப் பொருத்தப்படுகிறது. சிகிச்சை முடிந்ததும் கருணாநிதி இன்று மாலை வீடு திருமு்புவார் என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dmk chief m karunanidhi hospitalised for routine medical procedure in kauvery hospital

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X