/tamil-ie/media/media_files/uploads/2018/08/M-Karunanidhi-Health.jpg)
M Karunanidhi Health, கருணாநிதி
DMK Chief M Karunanidhi passed away : திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் இன்று (07-08-18) காலமானார். கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி மாலை 6.10 மணி அளவில் இயற்கை எய்தினார்.
அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து தொண்டர்கள் அவரின் உடல் நலம் தேறிவர வேண்டுமென வேண்டிக் கொண்டிருந்தனர்.
நேற்று அவருடைய உடல் நிலை மீண்டும் மோசமான நிலையை எட்டியவுடன் சென்னையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மரணம் ( DMK Chief M Karunanidhi passed away )
அலைமோதும் தொண்டர் படையினை சமாளிக்க இயலாமல் காவேரி மருத்துவமனை மற்றும் கோபாலபுரம் இல்லம் இரண்டிற்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் இரண்டு இடங்களிலும் அலைகடலென மக்கள் திரண்டு வந்தனர்.
கலைஞர் கருணாநிதியின் இறந்த செய்தியினைக் கேட்டு அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறது கோபாலபுரமும் காவேரி மருத்துவமனையும்.
/tamil-ie/media/media_files/uploads/2018/08/WhatsApp-Image-2018-08-07-at-6.00.19-PM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2018/08/S937.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/08/WhatsApp-Image-2018-08-07-at-6.01.59-PM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2018/08/WhatsApp-Image-2018-08-07-at-6.03.56-PM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2018/08/WhatsApp-Image-2018-08-07-at-7.25.11-PM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2018/08/WhatsApp-Image-2018-08-07-at-7.58.56-PM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2018/08/WhatsApp-Image-2018-08-07-at-9.05.34-PM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2018/08/WhatsApp-Image-2018-08-07-at-9.06.28-PM.jpeg)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.