சோனியா காந்தி பிறந்தநாளையொட்டி மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பில், பல விஷயங்கள் குறித்து பேசியதாகவும் கூட்டணி நல்லுறவு வலுவடைய இணைந்து பணியாற்றுவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். அதற்கு ஸ்டாலின் நன்றி ட்வீட் பதிவு செய்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின்.
பின்னர், கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை சோனியா காந்தியிடம் வழங்கினார். தொடர்ந்து வருகிற நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அவர்கள் விவாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மு.க.ஸ்டாலினுடன் கனிமொழி ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். நாளை டெல்லியில் நடைபெறும் அனைத்துக் கட்சி கட்சி கூட்டத்திலும் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
ராகுல் காந்தி பதிவுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திப்பு குறித்து பதிவிட்டிருந்தார்.
அதில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக பிரமுகர்கள் இன்று சோனியா காந்தி அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள். இந்த சந்திப்பில், பல விஷயங்கள் குறித்து பேசினோம். மேலும் இந்த பேச்சு வார்த்தை தொடரவும், இரண்டு கட்சிகளின் கூட்டணியை வலுப்படுத்தவும் இணைந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்திருந்தார்.
December 2018
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், “உங்களின் ஆதரவுக்கு நன்றி. ஒரே சிந்தனையுள்ள நபர்கள் சந்திக்கும்போது நல்ல பேச்சு வார்த்தைகள் நிகழும். திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒன்றாக இணைந்து இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும் நலனுக்கும் பணியாற்றும்.” என்று தெரிவித்தார்.
December 2018