கஜ புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களுக்கான நிவாரண பொருட்களை திருச்சி கலைஞர் அறிவாலயம் முகவரிக்கு அனுப்புமாறு மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
கடந்த வாரம் சுழன்றடித்த கஜ புயலின் சீற்றத்திற்கு பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரின் வீடுகள், விவசாய நிலங்கள், கால்நடைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இயற்கையின் இந்த கோரத் தாண்டவத்திற்கு டெல்டா பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்த துயரத்தில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீள முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். மீட்பு பணிகள் நடைபெறும் அப்பகுதிகளுக்கு அரசியல் தலைவர்கள் சிலர் சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
அவ்வாறு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அப்பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி திமுக சார்பாக இயன்ற உதவிகள் அவர்களை சென்றடையும் என்று தெரிவித்து வந்தார். இந்நிலையில், அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு அனுப்பு வைக்குமாறும் ட்விட்டர் மூலம் கேட்டுக்கொண்டார்.
November 2018கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நிவாரணப் பொருட்களை, தமிழகத்தில் உள்ள பிற மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் ‘திருச்சி கலைஞர் அறிவாலயம்’ முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைத்திட வேண்டுகிறேன்! மிக அவசரம்! pic.twitter.com/Yj9ZSETI46
— M.K.Stalin (@mkstalin)
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நிவாரணப் பொருட்களை, தமிழகத்தில் உள்ள பிற மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் ‘திருச்சி கலைஞர் அறிவாலயம்’ முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைத்திட வேண்டுகிறேன்! மிக அவசரம்! pic.twitter.com/Yj9ZSETI46
— M.K.Stalin (@mkstalin) November 18, 2018
அதில், “கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நிவாரணப் பொருட்களை, தமிழகத்தில் உள்ள பிற மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் ‘திருச்சி கலைஞர் அறிவாலயம்’ முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைத்திட வேண்டுகிறேன்! மிக அவசரம்!” என்று தெரிவித்திருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் சென்று சந்திக்காத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ‘எட்டிப்பார்க்காத பழனிசாமி’ என்று விமர்சித்துள்ளார்.
November 2018அதோ வருகிறார், இதோவருகிறார் என்று சொல்லப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் #CycloneDamages -யை எட்டிக்கூட பார்க்கவில்லை!
தூத்துக்குடியில் 13பேர் கொல்லப்பட்ட போதும், பசுமைவழிச்சாலை போராட்டத்திலும் நேரில் செல்லாமல் ஏமாற்றிய நிலைதான் இப்போதும்!
இனி அவர், ‘எட்டிப்பார்க்காத பழனிசாமி’! pic.twitter.com/Ccl8Ehj5Ep
— M.K.Stalin (@mkstalin)
அதோ வருகிறார், இதோவருகிறார் என்று சொல்லப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் #CycloneDamages -யை எட்டிக்கூட பார்க்கவில்லை!
— M.K.Stalin (@mkstalin) November 18, 2018
தூத்துக்குடியில் 13பேர் கொல்லப்பட்ட போதும், பசுமைவழிச்சாலை போராட்டத்திலும் நேரில் செல்லாமல் ஏமாற்றிய நிலைதான் இப்போதும்!
இனி அவர், ‘எட்டிப்பார்க்காத பழனிசாமி’! pic.twitter.com/Ccl8Ehj5Ep
அதில், “அதோ வருகிறார், இதோவருகிறார் என்று சொல்லப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் #CycloneDamages -யை எட்டிக்கூட பார்க்கவில்லை! தூத்துக்குடியில் 13பேர் கொல்லப்பட்ட போதும், பசுமைவழிச்சாலை போராட்டத்திலும் நேரில் செல்லாமல் ஏமாற்றிய நிலைதான் இப்போதும்! இனி அவர், ‘எட்டிப்பார்க்காத பழனிசாமி’!” என்று விமர்சித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.