/indian-express-tamil/media/media_files/2025/07/12/dmk-painter-attack-2025-07-12-20-28-08.jpg)
இ.பி.எஸ்.க்கு எதிராக ஒன்றுகூடப்போகும் 25,000 பேர்... தி.மு.க. மாணவரணி செயலாளர் எச்சரிக்கை
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க. மாணவரணி சார்பில் 14-ம் தேதிநடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக அக்கட்சியின் மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ்காந்தி,
தி.மு.க. மாணவரணி சார்பில் வரும் திங்கள்கிழமை கோவை டாடாபாத் பகுதியில் தமிழ்நாட்டில் கல்வி உரிமையைக் காவு வாங்க துடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழ்நாட்டு மாணவரை்ளுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க. வஞ்சக செயலைச் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் "எல்லோருக்கும் எல்லாம்" என்ற முழக்கத்துடன் ஏழை, எளிய அனைத்து தரப்பு மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வரை கற்ற தேர திட்டங்கள் கொண்டுவரும் நேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி தனது பதவி, கூட்டணி சுகத்திற்காக தனது எஜமானின் உத்தரவிற்காக தமிழக கல்வி நிலையங்களை கொச்சைபடுத்தி பேசி வருகிறார்.
அறநிலையத்துறை கல்வி நிலையங்களில் சதி நடக்கிறது என ஆர்.எஸ்.எஸ். போல மதக் கலவர புத்தியை மூளைக்குள் ஏத்திக் கொண்டும், தலையாட்டி பொம்மைபோல கோவையில் தனது கருத்துகளைப் பேசியுள்ளர். மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.2500 கோடி கல்வி நிதியை வழங்காததால், முதல்வர், அமைச்சர் அதிகாரிகள் கேட்டு வரும் நிலையில் இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது முதலாளியிடம் கேட்டு பெற்றுத் தர திரானி இல்லை. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் கூட மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்கவில்லை. அப்போது, திமுக போராடியது, அதன் விளைவாக நிதி பெறப்பட்டது.
தமிழக உரிமைகளைக் கேட்காத எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி அறிவித்த ஒரே வாரத்தில் பாஜக தலைவர்களை பங்காளிக்களாக நினைத்து அவர்கள் மத்தியில் பேசுகிறார். அறநிலையத்துறையில் கல்வி வழங்குவது சதி என்கிறார். கடந்த காலத்தில் திராவிட இயக்க தியாகத்தால் வந்த கல்வியை அழிக்கப்பார்க்கிறார். இவர்கள் கூட்டணி கல்வியை சிதைக்கும் கூட்டணி எனக் கூறினார்.
கல்வியை பல இயக்கங்கள் போராடி பெற்று கொடுத்த நிலையில், நடிகர் விஜய் ரூ.5,000 கல்வி உதவிதொகை என வழங்கு புகைப்படம் எடுத்துக் கொள்வது அறமற்ற செயல். இந்தித் திணிப்பை எதிர்த்து போராடி, தமிழ் தனித்து நின்றதால் விஜய் இன்று தமிழ் திரைப்படங்களில் நடித்து 200 கோடி வாங்குகிறார். ஒருவேளை பீகார், உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்திருந்தால் இங்கு பானிபூரி மட்டுமே விற்பனை செய்ய வந்திருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.