திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும்: கே.எஸ்.அழகிரி

DMK - Congress alliance : திமுக , காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை எனவும், வரும் சட்டசபை தேர்தலிலும், அடுத்து வரும் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

By: Updated: January 18, 2020, 05:37:36 PM

திமுக , காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை எனவும், வரும் சட்டசபை தேர்தலிலும், அடுத்து வரும் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர், திமுகவை விமர்சித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதனால், திமுக -காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கிறது என அழகிரி சமாளித்தாலும், கூட்டணி பழைய நிலைக்கு திரும்பியுள்ளதா என்பதை காலம் தான் பதில் சொல்லும் என திமுகவின் டி.ஆர்.பாலு தெரிவித்தார். மேலும், கூட்டணியை விட்டு காங்கிரஸ் போனாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியிருந்தார். இதனால், கூட்டணி நீடிக்குமா அல்லது முறியுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, கட்சி நிர்வாகிகள் கே.வி.தங்கபாலு, ராமசாமி ஆகியோர், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இதன் பின்னர் அழகிரி கூறுகையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. வரும் சட்டசபை தேர்தலிலும், அடுத்து வரும் தேர்தலிலும் கூட்டணி தொடரும். கூட்டணியில் கருத்துவேறுபாடு இல்லை. பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைப்பது குறித்து பேசியுள்ளோம். கூட்டணியில் ஆரோக்கியமான விவாதம் வந்துபோகும். இது சகஜம் தான். இது ஏற்புடையவை. திமுக கூட்டணியை அதிமுக கூட்டணியுடன் ஒப்பிட முடியாது. எல்லா கட்சிகளுக்கும் கூட்டணி தேவை. தற்போதைய நிலையில், தனித்து நிற்க எந்த கட்சிக்கும் தைரியமும் இல்லை. காங்கிரஸ் மேலிடம் எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டாலின் அறிக்கை : இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூட்டணி குறித்த கருத்துக்களை திமுக மற்றும் காங்., கட்சிகளை சேர்ந்தவர்கள் பொதுவெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dmk congress coalition continues tn congress chief k s alagiri

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X