Advertisment

காங்கிரசுக்கு 10 தொகுதிகள்: ஸ்டாலின்- செல்வப் பெருந்தகை அதிகாரபூர்வ அறிவிப்பு

காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

author-image
WebDesk
New Update
Congress signed

தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9+1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.  காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Advertisment

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில், வி.சி.க, ம.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்), கொ.ம.தே.க, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தான நிலையில், காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மட்டும் இழுபறியாக தொடர்ந்து வந்தது. 

இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், மற்றொரு பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் சென்னைக்கு வந்தனர். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், அஜய்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் செய்வதற்காக அண்ணா அறிவாலயத்திற்கு சென்றனர். தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை இறுதி செய்ய அண்ணா அறிவாலயம் வந்தார். 

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தி.மு.க  - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி 1 தொகுதி என  9+1 என மொத்தம் 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இருவரும் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் இன்று (09.03.2024) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில் காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் - புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியும் என மொத்தம் 10 தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுச்சேரி 1 தொகுதி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் வந்திருக்கிறார்கள். தொகுதிப் பங்கீட்டில்  உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. எங்கள் கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Alliance Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment