திருக்கழுக்குன்றத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்த நபர் கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, திமுக பெண் கவுன்சிலர் உட்பட 10 பேர் கொண்ட கும்பலை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் திருக்கழுக்குன்றம் திமுக கவுன்சிலர் தௌலத் பீவி (வயது 55), அவரது மகன் ஃபரூக் (வயது 31), இப்ராகி (வயது 31), மன்சூர் அலிகான் (வயது 31), முகமது அஜீஸ் (வயது 21), அப்துல் காதர் (வயது 27), ரஹமத்துல்லா (வயது 20) சலீம் பாஷா (வயது 41), ரஷித் உசேன் (வயது 22), ரஹ்மான் (வயது 28) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மசூதி தெருவில் வசிக்கும் 38 வயதான சர்புதீன் என்பவர், அதே பகுதியில் ஒரு கடை வைத்திருந்தார். அவர் ரியல் எஸ்டேட் முகவராகவும் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் சர்புதீன், அவர் வசிக்கும் தெருவில் உள்ள மசூதியைச் சுற்றியுள்ள நிலத்தை ஆக்கிரமித்து, கடைகளை கட்டியதாகவும், கட்டடங்களை அகற்ற உத்தரவிடக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முற்பட்டதாக கூறியுள்ளார். பின்னர், அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற உத்தரவிட்டது.
“குற்றம் சாட்டப்பட்ட தௌலத் பிவி மற்றும் அவரது மகன்களுடன் அவருக்கு நீண்டகாலமாக பகை இருந்ததாக கூறப்படுகிறது. சர்புதீனுக்கு கொலை மிரட்டல் வந்ததால், தனது உயிருக்கு பாதுகாப்பு கோரி காவல்துறையை அணுகினார்,” என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை ரியல் எஸ்டேட் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதற்காக கல்பாக்கம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த 5 பேர், அவரது காரை வழிமறித்து பட்டப்பகலில் அரிவாளால் வெட்டினர். இந்த சம்பவம் முழுவதும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சர்புதீன் சம்பவ இடத்திலேயே இறந்ததால், கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த கும்பலை பிடிக்க அப்பகுதியில் தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திங்கள்கிழமை திமுக பெண் கவுன்சிலர் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில், முகமது அஜீஸ் மற்றும் இப்ராஹிம் ஆகியோர், ஏற்கனவே 2022 டிசம்பரில் கஞ்சா கடத்தல் வழக்கில் பாஜக உறுப்பினர் ஒருவரைக் கொலை செய்ய முயன்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil