scorecardresearch

பாதிரியார்களை கைது செய்ய போப் ஆண்டவர் அனுமதி பெற வேண்டும்: திமுக விஐபி மருமகள் கருத்து

திமுகவின் மூத்த தலைவர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மருமகள் மெர்ஸி, “உலகின் எந்த மூலையிலும் எவனாக இருந்தாலும் பாதிரியார்களையும் சிஸ்டர்களையும் கைது செய்ய வாடிகனில் போப் ஆண்டவரின் அனுமதி பெற சட்டம் கொண்டுவர வேண்டும்” என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DMK Dindigul I Periyasamy's daughter in law Mercy, DMK MLA IP Senthilkumar wife Mercy, திமுக, திண்டுக்கல் ஐ பெரியசாமி மருமகள் மெர்ஸி, ஐபி செந்தில்குமார் மனைவி மெர்ஸி, பாதிரியார்களை கைது செய்ய போப் ஆண்டவர் அனுமதி பெற வேண்டும், திமுக விஐபி மருமகள் கருத்து, Mercy says bring a law for permission must from pope for arrest fathers and sisters, Dindigul, Stan Swamy, Father Stan swamy

“பாதிரியார்களை, சிஸ்டர்களை கைது செய்ய வேண்டும் என்றால் போப் ஆண்டவர் அனுமதி பெற வேண்டும் என சட்டம் கொண்டுவர வேண்டும்” என திமுக விஐபி மருமகள் மெர்ஸி செந்தில்குமார் பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி இன மக்களுக்காக போராடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி, எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிர்ந்த நிலையில், முதுமை காரணமாக உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள், அரசியல் இயக்கங்கள், கிறிஸ்தவ அமைப்புகள் அஞ்சலி செலுத்தி இரங்கல் கூட்டம் நடத்தி வருகின்றனர். பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாதிரியர் ஸ்டேன் சுவாமியை மத்திய அரசு இரக்கமில்லாமல் சிறையில் அடைத்து வைத்தது என்று பலரும் மத்திய அரசுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், கன்னியாகுமரி மாவட்டம், அருமனையைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, சிறுபான்மையினர் நல பாதுகாப்பு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், திமுகவின் மூத்த தலைவரும் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சருமான திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மருமகளும் திமுக எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமாரின் மனைவியுமான மெர்ஸி, “உலகின் எந்த மூலையிலும் எவனாக இருந்தாலும் பாதிரியார்களையும் சிஸ்டர்களையும் கைது செய்ய வாடிகனில் போப் ஆண்டவரின் அனுமதி பெற சட்டம் கொண்டுவர வேண்டும்” என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் பாதிரியார் ஸ்டேன் சுவாமி மறைவுக்கு நினைவேந்தல் கூட்டம் நிகழ்ச்சி நேற்று (ஜூலை 28) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மருமகளும் திமுக எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமாரின் மனைவி மெர்ஸி கலந்துகொண்டு பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மெர்ஸி பேசியதாவது: “பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். நாமும் குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன். பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் இறப்பு எனக்கு ரொம்ப மனவேதனையைக் கொடுத்தது. பாதிரியார்கள், சிஸ்டர்கள் யார் என்பதை நான் சொல்ல ஆசைப்படுகிறேன். நமக்கு எல்லாம் வீடு, குழந்தைகள் என ஒரு வட்டம் இருக்கிறது. நமக்கான ப்ரீ டைமில்தான் சமூக சேவை செய்ய முடிகிறது. ஆனால் ஒட்டுமொத்த வாழ்க்கையையே சேவைக்காக அர்ப்பணிக்கிற பாதிரியார்கள், சிஸ்டர்களுக்கு நாம் என்ன மரியாதை கொடுக்கிறோம்?

ஒரு பாதிரியார் (ஸ்டேன் சுவாமி) இறந்துவிட்டார். இன்று 200 பேர் குரல் கொடுப்பார்கள். அதற்கு பிறகு, நாளையும் ஒரு பாதிரியாரும் சிஸ்டரும் எங்கோ ஒரு இடத்தில் போராடிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் சொந்தமோ பந்தமோ இல்லாதபோதும் அவர்கள் மக்களுக்காக தொடர்ந்து போராடுகிறார்கள். கல்வியும் பகுத்தறிவும் பாதர்ஸும் சிஸ்டர்ஸும் வந்த பின்னர்தான் நமக்கு அதிகம் கிடைத்தது. அதனை நாம் மனதில் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் அரசியலும் சட்டமும் சொல்லித்தரப்பட வேண்டியது அவசியம்.

பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் பாதிரியார்கள், சிஸ்டர்கள் கைகளில் உள்ளது. இந்த கல்வி நிறுவனங்களில் துறவறம் பற்றியும் சொல்லிக் கொடுங்கள். துறவிகளாக வாழ்வதுதான் மிகப் பெரிய கடினமானது. உலகத்தில் இருக்கிற பாதிரியார்கள், சிஸ்டர்களை ஹீரோ ஹீரோயின்களைப் போல பார்க்க வேண்டியது அவசியம். இன்னொரு சட்டத்தை கொண்டுவரனும்னு தோண்றுகிறது.. இனிமேல் இந்த உலகத்தில் எவனாக இருந்தாலும் ஒரு பாதரையோ சிஸ்டரையோ அரெஸ்ட் பண்ணனும்னா வாடிகனில் போப் ஆண்டவரிடம் கேட்க வேண்டும். போப் ஆண்டவரிடம் கேட்காம அரெஸ்ட் பண்ணக் கூடாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும். துறவிகளாக இருப்பவர்கள் உலகம் முழுவதும் பணியாற்றுகிறவர்கள். ” என்று மெர்ஸி பேசியுள்ளார். மெர்ஸியின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dmk dindigul i periyasamys daughter in law mercy says bring act for permission must from pope for arrest fathers and sisters