Advertisment

மேயர், சேர்மன் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்த விருப்பமில்லாத திமுக மா.செ.க்கள்

மேயர் மற்றும் நகரத் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தலை நடத்துவதற்கு பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களுக்கு விருப்பமில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
New Update
DMK district secretaries do not like to direct election, indirect election for mayor and chairman in Local body polls, dmk, மேயர், சேர்மன், மேயர் சேர்மன் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல், நேரடித் தேர்தல் நடத்த விருப்பமில்லாத திமுக மாவட்ட செயலாளர்கள், DMK district secretaries, tamilnadu politics, tamil news

நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நேரடித் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளான சிபிஐ மற்றும் ம.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மறைமுகத் தேர்தலை சந்திக்க திமுக அரசு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு பிப்ரவரிக்குள் முடியும் என்று மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பு தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் கால்த்தில் 2011ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

நகப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) செயல்பாடு முதல்நிலை சரிபார்ப்பு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சமீபத்தில் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு 20 சதவீத உதிரி இ.வி.எம்.கள் (வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு அலகுகள்) இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கவுன்சிலர் மற்றும் மேயர்/தலைவர்/தலைவரை தனித்தனியாக தேர்வு செய்ய, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் இரண்டு EVMகள் தேவை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி, ஒரு சில மாவட்டங்களில் உள்ளாட்சித் தலைவர்களுக்குத் தனித் தேர்தல் நடத்துவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய சேமிப்பு அறைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மற்றும் பேலட் அலகுகளின் மொத்த எண்ணிக்கை போதுமானதாக இருக்காது. மேலும், வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல அறிவுறுத்தப்படாததால், வாக்குச்சாவடிகளுக்கு தலா ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒதுக்கப்படும். இதனால், கவுன்சிலர்களை தேர்வு செய்ய மட்டுமே தேர்தல் நடத்தப்படும்” என, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட அளவிலான அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், மாநில தேர்தல் ஆணையம் தனித்தனியாக தேர்தலை நடத்த தயாராக உள்ளது என்றும் இது குறித்த அரசாங்கத்தின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் அதிகாரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரம் EVM சரிபார்ப்பு மற்றும் முதல்நிலை சரிபார்ப்பில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து ஒன்பது மாவட்டங்களில் அமோக வெற்றி பெற்ற திமுக, வலுவான நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. கிராமப்புற அதிமுக வாக்குகளில் ஒரு பகுதி திமுகவுக்கு மாறியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர் மற்றும் நகரத் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தலை நடத்துவதற்கு திமுகவில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களுக்கு விருப்பமில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “மறைமுகமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒன்றிய தலைவர் முடிவுகள் குறித்து திமுக தலைமை மற்றும் மூத்த தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கடைசி நிமிடத்தில் எந்த மாற்றமும் இருக்காது” என்று அவர் கூறினார்.

மேயர் மற்றும் நகரத் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தலை நடத்துவதற்கு பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களுக்கு விருப்பமில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறைமுகமாக நடைபெற்ற ஒன்றியத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து திமுக மேலிட தலைவர்களும், மூத்த தலைவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Dmk Local Body Polls
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment