மா. சுப்பிரமணியன் மகன் மரணம்: கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்

ஊரார்க்கு ஒன்று என்றால் ஓடி நிற்கும் மா.சு.வுக்கு இப்படியொரு சோதனையா? ஆழ்ந்த இரங்கல்கள்!

By: Updated: October 17, 2020, 04:24:54 PM

சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,சட்டமன்ற உறுப்பினருமான திரு மா.சுப்பிரமணியன் அவர்களின் இளைய மகன் அன்பழகன் கொரோனா தொற்றுநோயால் இறந்தார். மாற்றுத்திறனாளியான அன்பழகன் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

அன்பழகனின்  இறப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.

திமுக தலைவர் மு. க ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், “அருமைச் சகோதரர் மா.சுப்பிரமணியத்தின் மகன் அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தது நெஞ்சை உறைய வைத்துவிட்டது. மா.சுப்பிரமணியம் இணையர் கண்ணின் மணி போல் காத்துவந்தார்கள். ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. ஊரார்க்கு ஒன்று என்றால் ஓடி நிற்கும் மா.சு.வுக்கு இப்படியொரு சோதனையா? ஆழ்ந்த இரங்கல்கள்!” என்று இரங்கல்  தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” மராதான் வீரர்- மனிதநேயர் மா.சுப்பிரமணியன்(திமுக) அவர்களின் அன்புமகன் அன்பழகன் கொரோனாவுக்குப் பலியானதை அறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து வாடுகிற மா.சு அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

திமுக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ” சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், மா. சுப்பிரமணியன் அவர்களின் அன்புப் புதல்வர் சு. அன்பழகன் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். இளம் வயது மகனை இழந்து சொல்லொணாத் துயருறும் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி வெளியிடை இரங்கல் குறிப்பில்,”  தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகர முன்னாள் மேயருமான மா. சுப்பிரமணியன்   அவர்களது 34 வயது நிரம்பிய மகன் திரு. அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்,”என்று தெரிவித்தார்.

சகோதரர் அன்பழகன் அவரை பிரிந்து வாடும் அண்ணார் மா. சுப்பிரமணியன் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவருடைய ஆன்மா இறைவனடி சேர இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று தமிழக பாஜக துணைத்தலைவர் கே. அண்ணாமலை இரங்கல் தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dmk district secretary former mayor ma subramanian son dies due to covid 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X