சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழகம் முழுவது இருந்து திமுக மாவட்டச் செயலாளர்கள் சென்னை வந்தனர். அவர்கள் அனைவரும் 10 மணிக்கெல்லாம் அறிவாலயம் வந்துவிட்டனர். காலை 10.15 மணிக்கு திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருடன் துரைமுருகன், எ.வ.வேலு உள்பட மூத்த தலைவர்கள் வந்தனர். இதையடுத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
திமுகவின் உள்கட்சி தேர்தல்கள் நடந்து வருகிறது. தமிழகர்த்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் காரணமாக முன் கூட்டியே சட்டசபை தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சமீபத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை சரிபார்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
இது குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்ட போது, ‘கூட்டத்தில் வாக்காளர் சரி பார்ப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. வேறு விவாதங்கள் நடந்தால், அது பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்தப்படும்’ என தெரிவித்தார்.