தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறுகையில், தமிழகத்தில் அமலாக்க துறை சோதனை நடத்தும் போது "ஓபன் சீக்ரெட்" ஆகும். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. ஏன் எனில் பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மட்டுமே சோதனை நடத்தப்படுகிறது.
மேற்கு வங்காளம், டெல்லி, பெங்களூர் ஆகிய மாநிலங்களில் இத்தகைய சோதனைகள் நடக்கிறது. பா.ஜ.கஅமைச்சர்கள் பலபேர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஆனால் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இத்தகைய சோதனைகள் நடக்கவில்லை.
நீண்ட நெடுங்கால பாரம்பரியமிக்க அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்க துறை ஆகியவற்றை பா.ஜ.க அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகின்றது. தி.மு.க மிசா உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளை கண்ட கட்சியாகும். எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது.
தி.மு.க எதைகண்டும் அஞ்ச போவதில்லை. அமலாக்கத்துறை சோதனையால் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட ரீதியாக இதை அணுகுவார்கள். இத்தகைய சோதனை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார்.
அ,தி,முக மீது குற்றஞ்சாட்டப்பட்ட கோப்புகளில் இதுவரை தமிழக ஆளுநர் ரவி கையெழுத்து இடாமல் வைத்துள்ளார். மத்திய அரசு தி.மு.கவிற்கான தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருவது எங்கள் கூட்டணியின் வேலையை, அலைச்சலை குறைத்துள்ளது" என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
செய்தி: த.இ.தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“