Advertisment

15 தலைவர்கள்... 75 நாட்கள்... 1500 கூட்டங்கள்... திமுக பிரசார யுக்தி

திமுக 75 நாட்கள், 15 தலைவர்கள் 234 தொகுதிகள் 1500க்கும் மேற்பட்ட கூட்டங்கள் 15,000 கி.மீ பயணம் என்று தேர்தல் பிரசாரத்தை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக உதயநிதி செண்ட்டிமெண்ட்டாக தேர்தல் பிரசாரப் பயணத்தை கலைஞர் பிறந்த இடத்தில் இருந்து இன்று தொடங்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
vidiyalai nokki, Stalin voice, dmk election campaign, dmk election campaign strategy, திமுக, திமுக தேர்தல் பிரசாரப் பயணம், விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல், உதயநிதி ஸ்டாலின், திருவாரூர், udhayanidhi started election campaign, dmk, thiruvarur, nagapattinam, 75 days, 15 leaders, 1500 meeting, 15000 km travel

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்துடன் திமுக 75 நாட்கள், 15 தலைவர்கள் 234 தொகுதிகள் 1500க்கும் மேற்பட்ட கூட்டங்கள் 15,000 கி.மீ பயணம் என்று தேர்தல் பிரசார பயணத்தை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக உதயநிதி செண்ட்டிமெண்ட்டாக தேர்தல் பிரசாரப் பயணத்தை கலைஞர் பிறந்த இடமான திருக்குவளையில் இருந்து இன்று தொடங்கினார்.

Advertisment

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சியான மத்தியில் ஆளும் பாஜகவும் எதிர்கட்சியான திமுகவும் தேர்தலை எதிர்கொள்ள வேகமாக ஆயத்தமாகி வருகிறது.

அதிமுக, திமுக என மாநிலத்தின் இரு பெரிய கட்சிகளுமே தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைத்து செயல்பட்டு வருகிறது. பாஜக வேல் யாத்திரை நடத்தி வருகிறது.

கடந்த தேர்தலின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே திட்டம் என்று தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் ஆதரவை திரட்டினார். அதே போல, இந்த தேர்தலில் திமுக ஏதேனும் ஒரு பெரிய பிரசார யுக்தியுடன் களம் இறங்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் 75 நாட்கள், 15 தலைவர்கள், 15,000க்கு மேற்பட்ட கூட்டங்கள் 15,000 கி.மீ.க்கு மேல் பயணம், 234 தொகுதிகளில் 500க்கு மேற்பட்ட உள்ளூர் நிகழ்வுகள், 10 லட்சம் நேரடி கலந்துரையாடல்கள் என மிகப்பெரிய பிரசார யுக்தியுடன் பிரசாரத்தை தொடங்கியிருகிறார்கள்.

இன்று முதல் கட்டமாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திமுக பிரமுகர்கள் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி சென்றார். திருச்சி மேல சிந்தாமணியில் திமுக திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து மணப்பாறையில் திமுக பிரமுகர் இல்ல திருமணத்தில் பங்கேற்றார்.

இதையடுத்து, திருவாரூர் சென்ற உதயநிதி ஸ்டாலின் செண்ட்டிமெண்ட்டாக கலைஞர் பிறந்த இடத்தில் இருந்து விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

உதயநிதி தனது முதல் நாள் பிரசார பயணத்தை இன்று மதியம் 2 மணிக்கு திமுக தலைவர் கலைஞர் பிறந்த இடத்தில் தொடங்கி தலைஞாயிறு கிராமத்தில் கட்சித் தலைவர்களோடு சந்திப்பது, பின்னர் கள்ளிமேடு தடுப்பனை பகுதியில் செய்தியாளர் சந்திப்பு, வேதாரணியத்தில் கட்சித் தலைவர்களோடு சந்திப்பு கொடிக்காடு கிராமத்தில் உப்பு உற்பத்தி தொழிலாளர்களோடு சந்திப்பு, வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே பொது மக்களோடு சந்திப்பு என திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, உதயநிதி, விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' பிரச்சார பயணத்தை தொடங்கும் முன்னர் திருவாரூர் காட்டூரில் அவருடைய பாட்டி அஞ்சுகம் அம்மையார் நினைவகத்தில் மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதி நினைவாக திருவாரூர் காட்டூரில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அவருடன் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், சட்டமன்ற உறுப்பினர் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

திமுகவின் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தேர்தல் பிரசாரப் பயணத்தை உதயநிதி செண்ட்டிமெண்ட்டாக கலைஞர் பிறந்த இடத்தில் இருந்து தொடங்கியுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Dmk Udhayanidhi Stalin Thiruvarur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment