திமுகவின் துணை பொதுச் செயலாளர்களாக கனிமொழி உட்பட 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் செண்டரில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரப்புர்வமாக தேர்வு செய்யப்பட்டனர்.
துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் தலைமை நிலைய முதன்மைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பெயர்களை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். துணைச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைமை நிலைய முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு தேர்வு செய்யப்பட்டார்.