New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/18/p3VuVdznovlr6wUke3Af.jpg)
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியிடம் தி.மு.க பிரமுகர் ஒருவர் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேட்பாளர் சீதாலட்சுமியிடம் செய்தியர்கள் கேள்வி எழுப்பினர்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியிடம் தி.மு.க பிரமுகர் ஒருவர் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேட்பாளர் சீதாலட்சுமியிடம் செய்தியர்கள் கேள்வி எழுப்பினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நல குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. கடைசி நாளான நேற்று வெள்ளிக்கிழமை தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமார் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷிடம் தாக்கல் செய்தார். இதேபோல், தி.மு.க-வுடன் நேரடி போட்டி போடும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தார்
இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் கடைசி நாளான நேற்று மட்டும் மாற்று வேட்பாளர்கள் உள்ளிட்ட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேட்புமனுக்களின் பரிசீலனை இன்று சனிக்கிழமை நிறைவடைந்தது. 58 வேட்பாளர்கள், 65 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த நிலையில் 3 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பட்டுள்ளது.
பேரம்
தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியிடம் தி.மு.க பிரமுகர் ஒருவர் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேட்பாளர் சீதாலட்சுமியிடம் செய்தியர்கள் கேள்வி எழுப்பினர்.
செய்தியாளர்கள் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியிடம், தி.மு.க பிரமுகர் ஒருவர் உங்களை தோட்டத்தில் சந்தித்துப் பேரம் பேசியது உண்மையா இல்லையா? என்றும், இது பற்றி அண்ணனுக்கு (சீமானுக்கு) குறுஞ்செய்தி அனுப்பினீர்களா? எனவும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "நான் அண்ணனுக்கு அனுப்பியது என்பது, அது எனக்கும் அவருக்குமானது. தி.மு.க-வினர் என்னிடம் பேரம் பேசினர் என்று கூறி, அதன் மூலம் நான் வெற்றி பெற விரும்பவில்லை.
நான் தத்துவார்த்த ரீதியாக தி.மு.க-வை எதிர்க்கிறேன். இங்கிருக்கும் தி.மு.க-வினரை நான் ஒருபோதும் வெறுப்பது கிடையாது. வாட்ஸ் ஆப்பில் வந்த பதிவுக்கு நான் பொறுப்பல்ல. இதுவரை யாரும் என்னிடம் பேரம் பேசவில்லை." என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.