திமுக செயற்குழு கூட்டம்; அ.தி.மு.கவின் முகமூடியை கிழித்தெறிய சபதமேற்போம் என தீர்மானம்
DMK Executive committee Meeting: நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வென்றபோதும் மறைமுகத் தேர்தலில் ஆளும்கட்சி கூடுதல் இடங்களைப் பெற்றது.
DMK Executive committee Meeting: நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வென்றபோதும் மறைமுகத் தேர்தலில் ஆளும்கட்சி கூடுதல் இடங்களைப் பெற்றது.
DMK Executive committee Meeting mk stalin speech, MK Stalin DMK, DMK Executive committee Resolutions, திமுக செயற்குழு
DMK Executive committee Resolutions: திமுக செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை கூடியது. இதில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சி விவகாரங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விவாதிக்கப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில், "அ.தி.மு.க அரசின் முகத்திரையைக் கிழித்தெறிய சபதமேற்போம்” உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Advertisment
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக.வை விட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சி குறைவான இடங்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த உற்சாகமான தருணத்தில் திமுக செயற்குழுக் கூட்டம் இன்று (21-ம் தேதி) திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வென்றபோதும் மறைமுகத் தேர்தலில் ஆளும்கட்சி கூடுதல் இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் கட்சியுடன் இடப் பங்கீட்டில் சலசலப்புகள் எழுந்தன.
Advertisment
Advertisements
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?
தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்களை தவிர்த்து மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்தச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் ஆறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1) உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
2) மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தேர்தலை உடனே நடத்திட வேண்டும். மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.
3) தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.
4) இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்ற அ.தி.மு.க அரசின் வஞ்சக நாடகத்திற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
5) இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் எனக் கோரி தீர்மானம்.
6) அ.தி.மு.க அரசின் அடுக்கடுக்கான தோல்விகளை மக்கள் மன்றத்தில் சுட்டிக்காட்டி அ.தி.மு.கவின் முகமூடியை கிழித்தெறிய சபதமேற்போம் எனத் தீர்மானம்.