2023ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் கடந்த திங்கள்கிழமை (ஜன.09) காலை 10 மணிக்கு கூடியது.
அப்போது, ஆளுனர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது கவர்னர் தனது உரையில் இருந்து திராவிட மாடல், முத்தமிழ் அறிஞர் கலைஞர் உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளை தவிர்த்துவிட்டார் என்ற குற்றஞ்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஆளுனர் உரையில் இல்லாத வரிகளை பேசியதை நீக்க வலியுறுத்தினார். மேலும் இது தொடர்பாக தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து, “ஆளுனருக்கு வரைவு உரையானது தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கனவே அனுப்பப்பட்டு, இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும் அச்சிட்ட பிரிதிகளாகவும் வழங்கப்பட்டு உள்ளன.
திராவிட மாடல் கொள்கைக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டுவரும் ஆளுனரின் செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் உள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுனர் இணைந்து விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன்.
இத்தீர்மானத்தினை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆளுனர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை (வியாழக்கிழமை) ஆளுனரை சந்தித்து முறையிடுகின்றனர்.
அப்போது, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோரும் செல்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/