/tamil-ie/media/media_files/uploads/2022/12/Kerala-DMK.jpg)
திராவிட மாடல் ஆட்சியை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் தி.மு.க தமிழகத்தில் மட்டுமே இயங்கிவந்த நிலையில், கேரளாவில் தனது 2-வது அலுவலகத்தை தொடங்கியதன் மூலம் திராவிட மாடல் அரசியலை தமிழகத்தை தாண்டி விரித்துள்ளது.
தமிழகத்திற்கு அடுத்தபடியாக கேரளாவிலும் திராவிட மாடல் கொள்கை வலுப்பெறத் தொடங்கியுள்ளது என்று கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில் தி.மு.க-வின் 2-வது அலுவலகத்தை புதன்கிழமை திறந்து வைத்த தி.மு.க தென்காசி மாவட்டச் செயலாளர் பி. சிவபத்மநாதன் கூறினார்.
கேரளாவில் தி.மு.க-வின் முதல் அலுவலகம் புனலூரில் திறக்கப்பட்டது. தி.மு.க அமைப்பாளர் முருகேசன் தலைமையில் கொட்டாரக்கரை தொகுதியில் இருந்து 50 பா.ஜ.க-வினர் தி.மு.க-வில் இணைந்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை குடும்பங்களுக்கு சூரிய ஒளி டார்ச் லைட்டுகள் வழங்கப்பட்டன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டி மலையாளத்தில் முழக்கங்களை எழுப்பியவாறு தி.மு.க-வினர் பேரூராட்சி அலுவலகம் வரை பேரணி நடத்தினர். அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் கொட்டாரக்கரை பேரூராட்சியில் சில வார்டுகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்று தி.மு.க தென்காசி மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன்.
திராவிட மாடல் ஆட்சியை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் தி.மு.க தமிழகத்தில் மட்டுமே இயங்கிவந்த நிலையில், கேரளாவில் தனது 2-வது அலுவலகத்தை தொடங்கியதன் மூலம் திராவிட மாடலை தமிழகத்தை தாண்டி விரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.