/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1782.jpg)
dmk figure dr.anand suicide namakkal - திமுக பிரமுகர் டாக்டர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! காரணம் என்ன?
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த செங்கப்பள்ளியில் திமுக மேற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளராக இருந்தவர் மருத்துவர் ஆனந்த். இந்நிலையில், இவர் தனது வீட்டின் தோட்டத்தில் தண்ணீர் தொட்டிக்கு அருகில் அமர்ந்து, இரட்டைக்குழல் நாட்டுத்துப்பாக்கியால் தொண்டையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பரமத்தில் வேலூரில் நர்சிங் ஹோம் வைத்து காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வந்த ஆனந்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து, ஆனந்தின் குடும்பத்தினர், உறவினர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இன்றைய தமிழ் செய்திகள் குறித்த உடனடி அப்டேட்டுகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
ஆனந்தின் மனைவி கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். மருத்துவர் ஆனந்திற்கு பலகோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதால், அவரின் தற்கொலைக்கு பணப்பிரச்சனை காரணமாக இருக்காது என்று போலீசார் கருதுகின்றனர். அதேபோன்று, மன ரீதியாகவும் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றே கூறப்படுகிறது. ஆகையால், அவர் வேறு என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.