தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கு. அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையை நாளை (ஜூலை 28) தொடங்குகிறார்.
இந்த நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தி.மு.க. பைல்ஸ்-2 என்ற பெயரில் ஏராளமான ஆவணங்கள் அடங்கிய ஊழல் புகார்களை மிகப்பெரிய 'டிரங்க் பெட்டி'யில் வைத்து வழங்கினார்.
இதில் 9 அமைச்சர்களின் சொத்து விவரங்கள், பினாமி சொத்துக்கள், சட்டத்துக்கு புறம்பாக எந்தெந்த வகையில் பணம் சம்பாதித்தனர் உள்ளிட்ட விவரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மற்ற விவரங்களை நாளை பாதயாத்திரை நிகழ்வின்போது அண்ணாமலை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்து கவர்னர் தனது சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிகிறது. அவர் வழக்கு தொடர பரிந்துரைத்தால் 9 அமைச்சர்களும் விசாரணையை சந்திக்க நேரிடும்.
முதலாவது வெளியிட்ட பட்டியலில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு எம்.பி., ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, கவுதம் சிகாமணி, சபரீசன், கலாநிதி மாறன் உள்ளிட்ட பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“