DMK files Complaint against Tamil Nadu Speaker Dhanapal : சபாநாயகர் மீது திமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதால், அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி எம்எல் ஏ பிரபு, ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் உள்ளிட்ட 3 அதிமுக எம்எல்ஏக்கள், அமமுக கட்சியின் துணை பொது செயலாளர் தினகரனுடன் இணைந்து ஆட்சிக்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, அவர்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, சபாநாயகர் தனபால் மீது திமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரத்தில், சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு, வரும் திங்கட்கிழமை ( மே 6ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : டிடிவி ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ் விவகாரம்: சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம்