விஜயபாஸ்கர் மீது திமுக புகார் : தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரி சோதனையில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பிய அறிக்கையில், கடந்த ஆண்டு சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையிட்ட போது அவருடைய தந்தை சின்னத்தம்பியிடம் 20 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், அது லஞ்சப்பணம் என அவரே ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியிடங்களை நிரப்பும் விவகாரத்தில், 21 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் வருமானவரித்துறை குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக தலைமைக் கழக வழக்கறிஞர்கள் நீலகண்டன், முத்துகுமார் ஆகியோர், சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் மற்றும் கண்காணிப்பு இயக்குநர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.