திமுக 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைத்துள்ளதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
Advertisment
தமிழகத்தில் அடுத்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி வியூகங்களை அமைக்கத் தொடங்கிவிட்டனர். தமிழகத்தின் பிரதான கட்சியான ஆளும் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளது. அதே போல, எதிர்க்கட்சியான திமுக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்பது உறுதியாகி உள்ளது.
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணி பற்றிய விவாதங்களை ஊடகங்களில் பார்க்கும்போது, தமிழகத்தில் இப்போதே தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டதைப் போல ஒரு தோற்றத்தை தருகிறது. அது தொற்றம் அல்ல, நிஜம்தான் என்று சொல்லும் விதமாக, திமுக 2021-ம் ஆண்டு தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்துள்ளது.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.
இந்த குழுவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், துணை பொதுச் செயலார் ஆர்.ராசா, துணை பொதுச் செயலார் அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி எம்.பி, திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி, திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"