former mayor uma maheshwari murder : நெல்லையை பதற வைத்துள்ள முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் ஒருவர் போலீஸ் சந்தேகத்துக்கு ஆளாகியுள்ளார். இவரிடம் போலீசார் தொடர்ந்து விடிய விடிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உமா மகேஸ்வரி கொலை:
கடந்த 23ஆம் தேதி நெல்லை மகாணத்தின் முதல் திமுக மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் வீட்டில் வேலை செய்து வந்த பெண் என 3 பேரையும் மர்ம நபர்கள் கொலை செய்தனர். பட்டப்பகலில் கொடூரமாக மூவரும் வீட்டில் ரத்த வெள்ளத்தில்ம் செத்து கிடந்தனர். மொத்த நெல்லையும் பதற வைத்த இந்த கொலை வழக்கில் மர்ம நபர்களை பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை காவல ஆணையர் 3 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார். போலீசாரின் விசாரணை உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என விரிந்தது. 3 ஆண்கள், 4 பெண்களிடம் விசாரணை நெருங்கியது. இதிலும் குறிப்பாக உமா மகேஷ்வரியை கொன்றதாக திமுக முன்னாள் பெண் பிரமுகர் சீனியம்மாள் என்பவர் சந்தேகிக்கப்பட்டார்.
இந்த தகவல் வெளியானது முதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. முதலில் நகைக்காக நடத்தப்பட்ட கொலை என்ற கோணத்தில் விசாரணை தொடங்கி கடைசியில் அரசியல் முன்னாள் பகை காரணமாக கொலை நிகழத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
யார் அந்த சீனியம்மாள்:
மதுரையை சேர்ந்த சீனியம்மாள் முன்னாள் திமுக பிரமுகர் ஆவர். திமுக மகளிரணி அமைப்பாளராக இருந்தவர்தான் சீனியம்மாள். இவரை தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக கூறி உமா மகேஸ்வரி பண மோசடி செய்ததாக தகவல்கள் வெளியாகின. பணம் கொடுத்து ஏமாந்த ஆத்திரத்தில் இந்த கொலை நடைபெற்றதா? என்ற கோணத்தில போலீசார் விசாரணையை துவங்கினர்.
அவரிடம் நேற்றைய தினம் காவல் துறையினர் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். பின்பு, சீனியம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “ என்னை 2 முறை வந்து போலீசார் விசாரித்தார்கள். எனக்கு உடம்பு சரியில்லை. கூடல்நகரில் உள்ள என் மகள் வீட்டுக்குதான் நான் வந்திருக்கிறேன்.
வந்த இடத்தில் நான் எப்படி இப்படியெல்லாம் செய்ய முடியும்? என்று விசாரணையின் போது போலீஸாரிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் பல்வேறு கோணங்களில் எல்லாரையும் விசாரிக்கிறோம். அந்த வகையில்தான் உங்களையும் விசாரிக்கிறோம் என சொன்னார்கள். இந்த கொலைக்கும் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. உண்மை குற்றவாளியை கண்டுப்பிடிக்காமல் போலீசார் என்னை சந்தேகிப்பது அபத்தமாக உள்ளது” என்றார்.
உமார் மகேஸ்வரி கொலை வழக்கில் துப்பு கிடைத்து விட்டதாக, போலீசார் பெரு மூச்சி விட்ட நிலையில், சீனியம்மாளின் இந்த பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லை உமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுப்பிடிக்க போலீசாருக்கு பல்வேறு தரப்பில் இருந்து அதிகம் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.