திமுக முன்னாள் அமைச்சர் செ. மாதவன் காலமானார்

திமுக கட்சியின் முன்னால் அமைச்சர் மாதவன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் செ. மாதவன். 85 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இந்நிலையில், திருப்பத்தூரில் அருகே சிங்கம்புணரியில் உள்ள அவரது வீட்டில் நேற்று உயிர் பிரிந்தது.

திமுக-வை சேர்ந்த மாதவன், அண்ணா மற்றும் கருணாநிதியின் ஆட்சிக் காலங்களில் முக்கிய பொறுப்பு வகித்தவர். மேலும் இருவரின் ஆட்சியிலும் மாதவன் அமைச்சர் பொறுப்பில் இருந்துள்ளார். திருப்பத்தூர் தொகுதியில் இருந்து 1962, 1967, 1971, 1984 என நான்கு முறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 1990 முதல் 1996 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

இவரின் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மாதவனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வணிகர் சங்கங்கள் சிங்கம்புணரி பகுதி முழுவது இன்று ஒரு நாள் கடையடைப்பு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.

×Close
×Close