scorecardresearch

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா மரணம்

அவர் இன்று தனது பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

DMK former MLA Veerapandi Raja passed away

DMK former MLA Veerapandi Raja passed away : முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வீரபாண்டி ராஜா உயிரிழந்தார். திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவராக இருக்கும் வீரபாண்டி ராஜா இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இன்று அவருடைய பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தன்னுடைய பிறந்தாளை ஒட்டி தன்னுடைய தந்தை ஆறுமுகத்தின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த நிகழ்வு திமுக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்தமகன் செழியன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் தற்போது இவருடைய மரணமும் திமுகவிற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

சேலம் வருகை புரியும் முதல்வர்

பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்க மதுரைக்கு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த நிகழ்வுகளை முடித்த பிறகு சேலம் சென்று வீரபாண்டி ராஜாவின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூற உள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dmk former mla veerapandi raja passed away