Advertisment

தி.மு.க முன்னாள் எம்.பி., ரா.மோகன் உடல்நலக் குறைவால் மரணம்

தி.மு.க முன்னாள் எம்.பி., ரா.மோகன் உடல்நலக் குறைவால் இன்று காலை உயிரிழந்தார்.

author-image
WebDesk
New Update
dmk mohan

முன்னாள் எம்.பி. ரா.மோகன் காலமானார்

தி.மு.க.கொள்கை மறவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரா.மோகன் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

Advertisment

1980 ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் 1989 ஆம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றி  பொதுமக்களுக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்து  பொதுமக்களின் அன்பு நன்மதிப்பைப் பெற்றவர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பேரன்பைப் பெற்றவர். மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

கழகத் தலைவர் முதல்வர்  அவர்கள் கோவைக்கு வரும்போதெல்லாம், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ரா.மோகனை அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி வந்தார்.

Advertisment
Advertisement

கழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகப் பணியாற்றியவர் மிசா கைதியாக ஓராண்டு காலம் சிறைவாசம் இருந்தவர்.

கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று கழகத்திற்காகவும் நாட்டுமக்களுக்காகவும் கொள்கை உறுதி மிக்கவராகச் செயல்பட்டார்.
 
கழகத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வந்த  ரா.மோகன் தனது 81 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். 

ரா.மோகன்  பேரிழப்பிற்கு  அவர்களது குடும்பத்தினருக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Death
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment