/tamil-ie/media/media_files/uploads/2019/04/Vasanthi-Stanley.jpg)
DMK Former MP Vasanthi Stanley
DMK Former MP Vasanthi Stanley : 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை திமுக சார்பில், மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர் வசந்தி ஸ்டான்லி. சட்டம் பயின்ற அவருக்கு வயது 56.
எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் என்று பன்முகத் தன்மை கொண்ட அவர், திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினராகவும், தமிழக சிறுபான்மை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
பாளையங்கோட்டையில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது
சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டையில் பிறந்து வளர்ந்தவர் அவர். உடல்நலக் குறைவு காரணமாக தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் மருத்துவ சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் நேற்று நள்ளிரவு அவர் உயிரிழந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய பூத உடல், சென்னை ராயபேட்டையில் அமைந்திருக்கும் லாயிட்ஸ் காலனியில் இன்று மாலை 6 வரை வைக்கப்பட உள்ளது. பின்னர் பாளையங்கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட உள்ளது.
நடைபெற்று முடிந்த தமிழக மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடியில், கனிமொழிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய விரும்பியதாகவும், அவருடைய உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்று வருத்தப்பட்டார் என்றும் அவருடைய நண்பர், கவிஞர் இளையபாரதி கூறியுள்ளார்.
கனிமொழி அஞ்சலி
திமுக தலைவர் முக ஸ்டாலின் அஞ்சலி
வசந்தி ஸ்டான்லியின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்டாலின் பேச்சு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.