/indian-express-tamil/media/media_files/okIBjfaOVFcgw8YmHGiw.jpg)
இன்பநிதிக்கு பாசறை அமைத்த விவகாரம்; தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட திருமுருகன், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்
இன்பநிதிக்கு பாசறை அமைத்த விவகாரத்தில் தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட திருமுருகன், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளார்.
புதுக்கோட்டை தி.மு.க வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளர் க.செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியின் பெயரில் 'இன்பநிதி பாசறை' தொடங்கி, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் அடித்து ஒட்டினர். ‘எதிர்காலமே!’ என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் மண்ணைப் பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை. போராட்டக்களமின்றி வெற்றிகள் கிடைப்பதில்லை’ என்ற வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.
சமூக வலைதளங்களில் பரவிய இந்த போஸ்டர் பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக திருமுருகன், மணிமாறன் ஆகியோரை இடைநீக்கம் செய்து தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி திருமுருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.