/tamil-ie/media/media_files/uploads/2021/02/murder.jpg)
Police sub inspector murdered at eral tuticorin district Tamil News
dmk ganesh pallavaram DMK : சென்னை பம்மல் பகுதியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் பல்லாவரம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பாக காணப்படுகிறது.
பம்மல் அருகே நாகல்கேணியைச் சேர்ந்தவர் கணேசன்(52). திமுகபிரமுகரான இவரை, நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது, பைக்கில் வந்த இருவர், அரிவாளால் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த கணேசனை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்தனர்.மருத்துவமனையில், மருத்துவர்கள் கணேசனை பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியை சேர்ந்த பாலசந்தர் (43), சுகுமாரன் (30), திருநீர்மலையை சேர்ந்த அன்பழகன் (44) ஆகியோரை கைது செய்தனர்
விசாரணையில் காலி நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயற்சித்தபோது கணேசன் எதிர்ப்பு தெரிவித்ததால் வீனஸின் வலியுறுத்தலின்பேரில் கணேசனை அன்பழகன், சுகுமார் கொலை செய்தது தெரிய வந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.